Tuesday, November 21, 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

உகாண்டா நினைவுகள் ....! (மாசாக்கா) புது இடம் புது பாடம் .

புது இடம் புது பாடம் .
உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒரு வருடம் வேலைபார்த்து கிடைத்த பதவி உயர்வோடு வந்த இடமாற்றம் விரும்பியோ விரும்பாமலோ புறப்பட்டு 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாசாக்கா எனும் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஏற்கனவே இருந்து எங்களது நிறுவனத்தின் ஏஜெண்டாக வாணிபம் செய்துவந்த உள்ளூர் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டேன். நாலுமாடி கட்டிடத்தில் தரத்தளத்தில் எங்கள் ஏஜென்ட்டின் கடையும் முதல் தளத்தில் அவரது வீடும் இரண்டாம் தளத்தில் அவரது பணியாட்களும் மூன்றாம் தளத்தில் எனக்கான வீடும் மேலும் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கிடங்கின் மேலாளனாக நானும் இருந்தோம்.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல புது இடம். காண்பதெல்லாமே புதிராகவும் புதிதாகவும் இருந்தது.

Monday, November 20, 2017

மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

என் எழுத்துக்கள் பேச்சுக்கள் செயல்கள் சிந்தனைகள் பொதுவானவையே அனுபவம் சார்ந்தவையே இதில் சார்பு யென்பதே கிடையாது அதில் எனக்கு உடன்பாடேயில்லை
சார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது
இதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

#உகாண்டா_நினைவுகள் ....! (மசாக்கா)


பதவி உயர்வு.
முதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்!
வேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.
1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.

இருளின் வெளிச்சம்

வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.
விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.

Sunday, November 19, 2017

அகங்காரத்தின் விளைவுகள்...

அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக
நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை
போல நினைத்து செயல்படுபவன்..
அகங்காரம் இருப்பவனால்,பிறர்மீது நல்லஎண்ணம வைக்கமுடியாது.
, அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை,தீமையை பகுத்தறியும் சக்திஇருக்காது .
அகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும்.
அகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.. இரக்கத்திற்கும்,கருணைக்கும் அங்கே வேலையில்லை..
. வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும்..
இதுவே வெளி அகங்காரம்.

LinkWithin

Related Posts with Thumbnails