Saturday, November 21, 2009

இந்து சமயத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்


கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்குமாவது சம்பந்தம் உண்டு,அது எப்படி இந்து சமயத்திற்கும் இஸ்லாத்திற்கும் சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கிறதா???ஆனால் இது ஒரு சந்தேகமில்லாத உண்மை....

எந்த ஒரு மதத்தைப் பற்றியும் நாம் அறிய வேண்டுமென்றால்,நாம் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளையும்,வேதத்தையும் ஆராய வேண்டும்......அந்த மதத்தை பின்பற்றுவோரை பார்த்து அறிவதை விட இதுவே சால சிறந்ததும் அறிவானதுமாகும்........

இந்துக்கள் பல கடவுள் வழிபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம்......ஆனால்,அடிப்படையான வேதங்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைப்பவை..........

இந்து மத புனித நூல்களில் உயர் அந்தஸ்துடையதாக கருதப்படுபவை வேதங்கள் ஆகும்........வேதங்கள் நான்கு.அவை ரிக் வேதம்,யசூர் வேதம்,சாம வேதம்,அதர்வண வேதம்.

1.யசூர் வேதம்

* " நா தஸ்ய பிரதிம அஸ்தி "

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது.
( யசூர் வேதம் 32:3 )

* அவன் உருவமற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான்
( யசூர் வேதம் 40:8 )
இதையேதான் திருக்குர்ஆன் (42:11),

" அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" என்கிறது.


* " அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே"

எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ( யசூர் வேதம் 40:9)


அசம்பூதி - இயற்கை வஸ்துக்கள்; காற்று,நீர் போன்றவை........
சம்பூதி - மனிதனால் படைக்கப்பட்டவை; நாற்காலி,சிலைகள் போன்றவை.......


* "எங்களுக்கு நேர்வழியைக் காட்டி வழிகெடுக்கும் பாவங்களிலிருந்து எங்களை நீக்கி வைப்பாயாக" ( யசூர் வேதம் 40:16)

இது யசூர் வேதம் கூறும் பிரார்த்தனையாகும்..........

"நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல;நெறி தவறியோர் வழியுமல்ல" (திருக்குர்ஆன் 1:5,6,7)


2.அதர்வன வேதம்

* 'தேவ் மஹா ஓசி'

நிச்சயமா கடவுள் மிகப்பெரியவன் ஆவான் ( அதர்வ வேதம் 20:58:3)

இது அதர்வ வேதம் கடவுளைப் புகழும் வரிகள் ஆகும்.......

"அனைத்துப் புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் ( நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்" (திருக்குர்ஆன்1:1)


3.ரிக் வேதம்

* " மா சிதன்யதிவி சன்சதா"
நண்பர்களே!தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள்.அவனை மட்டுமே வணங்குங்கள். (ரிக் வேதம் 8:11)

* உண்மையிலேயே தெய்வீக படைப்பாளனின் புகழே பெரியது. (ரிக் வேதம் 5:5:8)

* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)

ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் 'பிரம்மா' என்பதாகும்.'படைப்பாளன்' என்பது இதன் பொருள்.இதனை அரபியில் மொழி பெய‌ர்ப்போமேயானால் 'கலிக்' என்றாகும்.ஏக இறைவனை 'கலிக்' என்றோ 'படைப்பாளன்' என்றோ 'பிரம்மா' என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் க‌ருத்தில்லை........ஆனால் ' பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு' என்று கூறுவதையே மறுக்கின்றனர்........ரிக் வேதம் கூறும் மற்றொரு அழகிய திருநாமம் 'விஷ்ணு'.இதன் பொருள் 'பரிபாலிப்பவன்'.இதை அரபியில் மொழிப்பெயர்த்தால் 'ரப்' என்றாகிறது........இறைவனை 'ரப்' என்றோ,'பரிபாலிப்பவன்' என்றோ,'விஷ்ணு' என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,'விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்' என்பதையே மறுக்கின்றனர்........

இந்த உருவங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதினால் முஸ்லிம்கள் அப்பெயரை ஏற்றுக்கொள்வதில்லை........இதனையேதான் யசூர் வேதமும் ( 32:3)

"அவனுக்கு எந்தவொரு உருவமும் கிடையாது" என்கிறது......
4.பிரம்ம சூத்திரம்

"ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே
நஹ்னே நாஸ்தே கின்ஜன்"

இறைவன் ஒருவனே.வேறு இல்லை.இல்லவே இல்லை. என்கிறது......
 
இவ்வாறாக விருப்புவெறுப்பற்ற நிலையில் இந்து மத கிரந்தங்களைப் படிக்கும் பொழுது அவைகள் ஏக தெய்வக் கொள்கையை கொண்டுள்ளன என அறிந்து கொள்ளலாம்........

No comments: