Tuesday, November 3, 2009

கல்வி முறை மாற்றம் தேவையா…

நண்பர்களே…

எனது மனதை நெடுங்காலமாக உருத்தி வரும் விஷயம் இது. உங்கள் கருத்துக்களை
முன்மொழியுங்கள் என்னுடைய சந்தேகத்திற்கு… என்னுடைய சந்தேகம் இதுதான்… நமது
மக்கள் நிறைவான அறிவைப் பெற எவ்வகையான கல்வி முறை அவசியம்…

நமது இதிகாசங்களில் குறிப்பிட்டுள்ள குருகுலக்கல்வி முறை தற்போதைய சூழ்நிலைக்கு
சற்றும் ஒத்துவராது. அதை புறக்கனித்து விடலாம்…

இப்போது உள்ள கல்வி முறைக்கு என்ன குறை என்று கேட்பீர்கள்… நான் குறையாக
காண்பவை இவைகள்தான். இக்கருத்துக்கள் பெரும்பான்மை நிலவரத்தை குறிப்பவை.

·         தற்போதைய சூழ்நிலையில் படிக்கும் மாணவன் மதிப்பெண்ணிற்காக மட்டுமே
படிப்பது முதல் குறை.

·         பெற்றோர்களின் நினைப்பை நிறைய மதிப்பெண் நமது மகன் (மகள்) வாங்க
வேண்டும், அப்பொழுதுதான் அவனது (அவளது) வாழ்க்கை நன்றாய் இருக்கும் என
மாற்றியது இரண்டாவது குறை.

·         மதிப்பெண்ணை மட்டுமே மனதில் கொண்டு படிக்கும் மாணவன் தன்னைத்
தேர்ச்சிப் பெற்றவனாக காட்ட வேண்டும் என்பதற்காக சிறுதாள்களில் பாடங்களை
திருட்டுத்தனமாக எழுதி எடுத்துச் சென்று பரீட்சை எழுத தூண்டி மறைமுகமாக
திருட்டை போதிப்பது மூன்றாம் குறை.

·         பொறியியலோ மருத்துவமோ படிக்க மதிப்பெண்ணை மட்டுமே மையமாக வைத்து,
அறிவை சோதிக்காமல் கற்க அனுமதி தருவது நான்காவது குறை.

இப்பொழுது மதிப்பெண் இல்லாவிட்டாலும் பணம் கொடுத்து படிப்பது வாடிக்கையாகி
விட்டது. இது நமது மடலை திசைதிருப்பக் கூடியதாய் அமையும் அதனால் இதை விட்டு
விடுவோம்.

இவ்வாறு பல குறைகளை கொண்டு அறிவை வளர்க்க கல்வி என்ற நிலை மாறி மதிப்பெண் பெற
கல்வி என்ற நிலையை அடைந்திட்ட கல்வியை அறிவை வளர்க்ககூடியதாக மாற்ற என்ன
வழி்?..

  source  http//groups.google.com
  நன்றி:அன்புடன்

No comments: