Friday, November 27, 2009

அ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு


1933ஆம் ஆண்டு அக்டோபர் 9ந் தேதி (ஹிஜிரி 1352 ஜமாதுல் ஆஹிர் பிறை 18) நீடூரில் சயீது பிறந்தார்.
இவருடைய தந்தை அல்ஹாஜ் சி.அ. அப்துல்காதர் தாயார் அல்ஹஜா உம்மு சல்மா பீவி.

சயீதின் உடன் பிறப்புகள் : ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது அலி ஜின்னா
உடன் பிறந்த சகோதரிகள் ரஹமத்துன்னிஷா , பாத்திமாஜின்னா.
"சிந்தனைக் களஞ்சியம்" என்ற தனது முதல் நூலை, தந்தை ஹாஜி அப்துல் காதர் சாஹிப் , தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.
"எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.
"தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்" என்று திருக்குரான் கூறுகிறது.
நீடூரில் தான் வசித்த வீட்டுக்கு "சல்மா இல்லம் என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார், .


நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார். அதில்...

"முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு -- அங்கு
சென்று விடத்தான் நினைப்பு"

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!
--------------------------------------
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!"

வஸ்ஸலாம்.
S..E.A.Mohamed Ali Jinnah,Nidur.



 அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் நாகூர் E.M.ஹனீபா பேச்சு 

"சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம் "-நாகூர் E.M.ஹனீபா பேச்சு 

“அற்புதம் என்றாலும்…” பாடலை பலமுறைக் கேட்டு அதன் பொருட்சுவையில் அகமகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அர்த்தமுள்ள அந்த பாடல் அண்ணன் அ.மு.சயீத் அவர்களின் ஆக்கம்தான் என்பதை நீடூர்ஆன்லைன்.காம் மூலமே அறிந்தேன்.

பாடலுக்கு தனது கம்பீரமான குரல் மூலம் மெருகேற்றிய இளவல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், அதை உலகெங்கும் வாழும் சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒலி,ஒளி பரப்பிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளக்குழுவினருக்கும் மிக்க நன்றி.

-அ.முஹம்மது அலி ஜின்னா

நீடூர்-நெய்வாசல்
-----------------------------------------------------------------------------------------------------------------------
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

வஸ்ஸலாம்.

S..E.A.Mohamed Ali Jinnah,Nidur.

No comments: