Monday, January 25, 2010

முஸ்லிம்களை பற்றி அறிவதற்கு பயணம் மேற்க்கொண்ட குடும்பம்

முஸ்லிம்களை பற்றி அறிவதற்கு பயணம் மேற்க்கொண்ட குடும்பம்: "

துபை:புத்தகங்களில் மட்டும் படித்த மத்தியக் கிழக்கு நாடுகளின் முஸ்லிம் நாகரீகத்தை அனுபவித்து அறிய ஐரோப்பாவிலிருந்து தரை வழியாக பயணம் புறப்பட்ட ஸக்கியும் அவரது குடும்பமும் அமீரகத்தை வந்தடைந்தார்கள்.

யூதக் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவராக வளர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தனது மனைவி ஆயிஷாவின் விருப்பத்திற்கிணங்கத்தான் ஸக்கி மற்றும் அவரது குடும்பத்தினரின் மத்தியகிழக்கு பயணம்.


படித்தறிந்த இஸ்லாமிய நாகரீகத்தின் மண்ணை நேரில் கண்டு அறிந்துக் கொள்வதற்குதான் ஸக்கி பயாத்தும் அவரது மனைவி ஆயிஷாவும் ஐந்து பிள்ளைகளும் ஆஸ்திரேலியாவிலிருந்து சொந்தக்காரில் எட்டு நாடுகளை தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தை வந்தடைந்தனர்.


சுவீடனிலிருந்து ஆரம்பித்த இவர்களின் பயணம் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, கிரீஸ், துருக்கி, சிரியா, ஜோர்டான், சவூதி அரேபியா, எமன், ஒமான் ஆகிய நாடுகளை தாண்டி அமீரகம் வந்துள்ளனர்.


40 தினங்கள் நீண்ட இந்த பயணத்தில் அவர்களும் பல இடங்களிலும் தங்கியுள்ளனர். அங்குள்ள மக்களுடன் தொடர்புக் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரத்தையும் அனுபவித்து அறிந்துள்ளனர். கிறிஸ்ட்லர் காரில் 8 ஆயிரம் கி.மீ தாண்டி அமீரகம் வந்துள்ள இவர்கள் திரும்பிச்செல்வது விமானத்தில்தான்.


காரை திரும்பிக் கொண்டுச் செல்லாததற்கு தொழில் நுட்ப பிரச்சனைதான் காரணம். காரை இங்கு விற்றுவிட்டு திரும்பிச் செல்வார்கள். ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஸக்கீ முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். அவரது மனைவி ஆயிஷாவின் தாய் யூத மதத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரது தாயை மறுமணம் புரிந்தது கிறிஸ்தவ பாதிரியாராவார். அவ்வாறு ஆயிஷா கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் பயின்று மிஷனரி வேலைகளில் மூழ்கிப்போனார். இதற்கிடையே இஸ்லாமிய புத்தகங்கள் ஒப்பீடு ஆய்வுக்காக இவருக்கு கிடைத்தது. மேலும் முஸ்லிம் நண்பர்களுடனான நட்பு இவரை இஸ்லாத்தை தழுவச்செய்தது. 10 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆயிஷா இஸ்லாத்தை ஏற்றார். படித்து புரிந்துக்கொண்ட இஸ்லாத்தை முஸ்லிம் உலகத்தில் காணமுடியாததில் ஆயிஷாவுக்கு வருத்தம் உண்டு. மனித சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் இஸ்லாத்தில் கண்டறிந்த ஆயிஷா இஸ்லாத்தைக் குறித்த நீண்டதொரு ஆய்வின் ஒரு பாகமாகத்தான் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்க்கொண்டார்.


முஸ்லிம்கள் தங்களது பாரம்பரிய இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டுவிட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை காப்பியடிக்க முயலும் வேளையில் மேற்கத்தியர்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையினால் துயரத்தை அனுபவித்து வருகின்றார்கள் என்று ஆயிஷா தெரிவிக்கிறார். ஐரோப்பிய நாடான துருக்கியில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை கைவிடாமல் பாதுகாக்கும் பொழுது அரபு நாடுகளில் இதற்கு மாற்றமாக நடைபெறுகிறது என்ற கருத்தும் ஆயிஷாவுக்கு உண்டு.


மேற்கத்திய நாடுகளில் வாழும் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என்று கோலாகலப்படுத்தப்படும் பொழுது அப்பெண்கள் தந்தை, கணவர் மற்றும் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்காமல் துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள் அவர்கள்.


உறவுகளுக்கு முஸ்லிம் நாடுகளில் அளிக்கப்படும் முக்கியத்துவம் முன்மாதிரியாகும். முஸ்லிம்கள் தங்களது எல்லாச் செயல்பாடுகளிலும் மீண்டும் (இஸ்லாத்தின்) வேர்களை நோக்கி திரும்பிச் செல்லவேண்டும் என்று ஆயிஷா கூறுகிறார். ஒருவார துபாய் சுற்றுபயணத்திற்கு பின்னர் ஸக்கியும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிச்செல்வர்.

செய்தி:மாத்யமம்
உலகம், சமுதாய செய்திகள்
நன்றி :http://muthupet.org/

"

No comments: