Sunday, January 31, 2010

மல்லிகையே


வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே

வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை

உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே

தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே

கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்

கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்

மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே

சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே

நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

Thanks to  http://niroodai.blogspot.com

U9WDWV47RSV3

No comments: