Wednesday, January 27, 2010

“நன்றி”

By nanrasitha

நன்றி சொல்வது எப்படி…?

இயந்திரத்தனமாக நாக்கிலிருந்து உச்சriக்கப்படுவது அல்ல நன்றி ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்துக்கு உணர்த்தப்படுவது உணர்வுபூர்வமாக ஒருவர்

தனது நன்றியை தொpவிக்கும்போது.  கும்பிடுவதற்காக தானாகவே கைகள் ஒன்று கூடும்.. உதடுகள் துடிக்கும்.. கண்களில் நீர்த்துளி பனிக்கும்…

இது ஜென் புத்திசத்தில் உள்ள  ஒரு கதை * ஜப்பான் நாட்டில் உண்மையில் நடந்த கதை
இது -

சிறிய ஓட்டல் ஒன்றுக்கு முதலாளி அவர்.  காலையில் எழுந்தால் இரவு படுக்கப்
போகும் வரை.  அவருக்கு ஓட்டல் வேலை சரியாக இருக்கும் என்றhலும், அவர் மனம்
மட்டும் ஆன்மீகத்திலேயே மையம் கொண்டிருந்தது.  ஒரே ஒரு ஜென் மதத் துறவியையாவது தரிசிக்க வேண்டும் என்பது இந்த ஓட்டல் முதலாளியின் தீராத ஆசை.  ஆனால், துறவியைத் தேடிப் போகக் கூட அவரது வேலைப்பளு அனுமதிக்கவில்லை.

ஓட்டல் முதலாளியின் விருப்பம் ஓட்டல் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியும். ஜென் துறவிகள் மற்ற மதத் துறவிகள் போல காவி உடையோ அல்லது சாமியார்களுக்கென்று ஒரு பிரத்தியேகமான உடையோ வடிவமைத்து அணியமாட்டார்கள்.

ஒரு சராசரி ஜப்பானியனைப் போன்றுதான் ஜென் மதத் துறவிகள் உடை அணிவார்கள்.  அதனால் ஜென் மதத் துறவி யார், சாதாரணக் குடிமகன் யார் என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்.

ஒரு நாள் வழக்கம்போல், நமது ஓட்டல் முதலாளி மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு ஒரே பிஸி என்றாலும், இடையில் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களை விரயமாக்காமல் ஓட்டலில் யார் சாப்பிடுகிறhர்கள்..? என்ன சாப்பிடுகிறhர்கள்..?” என்று கவனிப்பது இவரது வழக்கம்.  வழக்கம்போலவே நமது ஓட்டல் முதலாளி, அன்று உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பக்கம் பார்வையைத்  திருப்பினார்.

அங்கே இரண்டு பேர் டீ அருந்திக் கொண்டிருந்தார்கள்.  ஓட்டல் முதலாளிக்கு உற்சாகம் பிடிபடவில்லை.  ”நான் இத்தனை வருடமாகக் காத்துக் கொண்டிருந்த ஜென்
துறவிகள,; கடைசியில் என் ஓட்டலுக்கே வந்து விட்டார்கள்..” என்று உற்சாக
கூச்சலோடு ஓடினார்.  டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இருவரும் உண்மையிலேயே ஜென் துறவிகள் என்பதால், அவர்கள் ஓட்டல் முதலாளியின் ஆர்வத்தைப் பார்த்து, அவரைத் தங்களின் சீடராக ஏற்றுக் கொண்டார்கள். தனது மகனிடம் ஓட்டலை ஒப்படைத்து விட்டு ஜென் துறவிகளின் பின்னால் நடக்கத் துவங்கிய மாஜி ஓட்டல் முதலாளியைப் பார்த்து வாடிக்கையாளர்கள் கேட்டார்கள்.

“அவர்கள் துறவிகள் என்று நீங்கள் எப்படிக் கண்டு கொண்டீர்கள்…”

துறவிகளின் பின்னே நடந்தபடியே, மாஜி ஓட்டல் முதலாளி இப்படிப் பதில் சொன்னார். “இவர்கள் டீ அருந்திய விதத்தைப் பார்த்தே அடையாளம் கண்டு கொண்டேன். மரியாதையோடு இரண்டு கைகளாலும் டீக்கோப்பையைப் பற்றுவதிலிருந்து அதை நன்றி பெருக்கோடும் வாஞ்சையோடும் குடிப்பது வரை அவர்கள் தங்கள் அன்பைப் பிரதிபலித்தார்கள்.”

இந்த மாஜி ஓட்டல் முதலாளி, பிற்காலத்தில் ஒரு ஜென் துறவியாக மாறினார்.  அது
மட்டுமல்ல, தன்னுடைய ஞானக் கண்களைத் திறந்த துறவிகளின் நினைவாக அவர் “ஜென் டீ மெடிட்டேஷன்” என்ற ஒரு நவீனத் தியான முறையையும் இந்த உலகுக்கு வழங்கினார். சாp, “ஜென் டீ மெடிட்டேஷன்” என்றhல் என்ன..? நீங்கள் யூகித்தது சாpதான்.. “ஒரு கோப்பை டீயை நன்றிப் பெருக்கோடு ருசித்து, அனுபவித்து காதலோடு குடிப்பதுதான் ஜென் டீ மெடிட்டேஷன். ஜப்பான் நாட்டில் ஜென் டீ திருவிழா “((Zen Tea Ceremony))” என்று இப்போதும் கூட நடக்கிறது. அந்தத் திருவிழாவில் அந்த நாட்டு மக்கள் ஒரு சாதாரண டீயை இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு நன்றிப் பெருக்கோடும் வழிந்தோடும் காதலோடும் உணர்வுபூர்வமாக அருந்துவார்கள்.

ஜப்பானியர்கள் நன்றியோடு இருக்க, ஆண்டவன் அவர்களுக்கு டீ மட்டுமல்ல.. இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொடுத்திருக்கிறhன்.  ஆனால், நான் இறைவனுக்கு நன்றி சொல்ல இறைவன் பசியையும் ஏழ்மையையும் தவிர எனக்கு என்ன கொடுத்திருக்கிறhன்..? என்று நம்மில் சிலர் கேட்கக் கூடும்.

இந்தக் கேள்விக்கு சுஃபி மதம் பதில் சொல்கிறது…

இஸ்லாமிய மதத்தில் சுஃபி என்று ஒரு பிரிவு உண்டு.  அப்படிப்பட்ட ஒரு பிரிவின்
துறவி, தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மண்டையைப் பிளக்கும் வெயில் செருப்பில்லாத கால்களை முட்கள் கொடுமைப்படுத்துகின்றன.  எதையும் பொருட்படுத்தாது அந்தத் துறவி, காட்டின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறhர்.  வழியில் தானம் கேட்டுப் பசியாறுவதற்கோ அல்லது தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் குடிப்பதற்கோ எந்த வசதியும் இல்லை.

மெள்ள இரவும் வருகிறது.  துறவியும் அவரது சீடர்களும் எந்த உணவும் சாப்பிடாமலேயே தூங்குவதற்காக ஆயத்தமாகிறhர்கள்.  அப்போது அந்த சுஃபி துறவி, ஓ ஆண்டவனே  நீ இன்று எனக்குக் கொடுத்த எல்லாவற்றுக்கும் உனக்கு நன்றி.. என்று சத்தமாக வாய் விட்டு பிரார்த்தனை செய்ய, பசியால் வதைந்து கொண்டிருக்கும் சீடர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது.  கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்க்ள துறவியைப் பார்த்துக் கேட்கிறhர்கள்- ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை..

ஆனால், நன்றி என்று பிரார்த்தனை செய்தீர்களே.. அதன் அர்த்தம் என்ன..? சுஃபி துறவி சிரித்துக் கொண்டே சொன்னார் ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே
கொடுக்கவில்லை என்று யார் சொன்னது..? தன் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்..? என்ன கொடுக்கக் கூடாது..? என்று எப்படி ஒரு தாய்க்குத் தெரியுமோ, அதே போல நமக்கு இன்று எது கொடுக்கவேண்டும்… எது கூடாது..? என்று இறைவனுக்குத் தெரியும்.
ஆண்டவன் இன்று நமக்குப் பசியைக் கொடுத்திருக்கிறhர்.  அவர் எது செய்தாலும்
சரியாகத்தான் செய்வார் அதனால்தான் அவருக்கு நன்றி சொன்னேன்.

மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ் இல் பதிவிடப்பட்டது

நன்றி http://nanrasitha.wordpress.com

No comments: