Tuesday, April 27, 2010

வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

வளைகுடாவில் வேலை வாய்ப்புகள் : வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

- ஓர் ஷ்பெஷல் ரிப்போர்ட்

2009 இறுதி காலாண்டில் வளைகுடாவில் உள்ள நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று கடந்த மார்ச் மாதத்தில் வளைகுடாவின் பிரபல வேலை வாய்ப்பு நிறுவனம் சர்வே எடுத்தது. அதில் கிடைத்த சுவையான தகவல்கள் இந்நேரம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தமிழில் அளித்துள்ளோம்.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சில்லறை வணிகத் துறையும் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வேலை இழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமாக இருந்த போதிலும் அது தான் வேலை தேடும் வெளிநாட்டவர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேலை கிடைப்பது வளைகுடாவின் எந்த நாட்டையும் விட சவூதியில் தான் எளிதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் சவூதியில் 2.4%, கத்தரில் 2.2%  வேலைவாய்ப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓமனில் கூட 0.3% வேலைகள் அதிகரித்துள்ளன. இதே காலாண்டில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் முறையே 2.8%, 4.2%, 7.7% வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் அடிப்படை கட்டுமாணப் பணிகளுக்கு சவூதி அரசாங்கம் செலவழிக்கும் தொகையும் தன் நாட்டில் அதிகமாக கிடைக்கும் இயற்கை வாயுவை கத்தர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதுமே புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதற்கான காரணம். அது போல் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலையே ஐக்கிய அரபு அமீரகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. வங்கித் துறை, முதலீட்டு துறையில் ஏற்பட்ட சரிவு குவைத், பஹ்ரைனின் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் சவூதியிலிருந்து வெளியே சென்ற அன்னிய செலவாணி 12% அதிகமாக உள்ளதும், அமீரகத்திலிருந்து வெளியே சென்ற அன்னிய செல்வாணி 15% குறைவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

துறை வாரியாக பார்த்தோமென்றால் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 3%,சில்லறை வணிகத்தில் 2.6% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளை ரியல் எஸ்டேட்டும் எண்ணைய் துறையிலும் முறையே 7.8%, 4.7% வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புடன் வளைகுடாவில் விற்பனை துறையில் 3.5% வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நிதி மற்றும் நிர்வாக துறைகளில் முறையே 3.1%, 2.2% வேலை இழந்துள்ளனர். இஞ்சினியரிங் துறையிலும் 2.6% வேலை இழப்புகள் திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ளது.

2010 வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 2009 இறுதியிலும் வளைகுடாவில் பல நாடுகள் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அப்படி வேலை இழந்தவர்கள் ஏறக்குறைய 50 சதவிகிதம் நபர்கள் வளைகுடாவிற்குள்ளேயே வேறு வேலைக்கு மாறியுள்ளனர். மூன்றில் ஒரு பகுதி நபர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளோர் மேற்படிப்பு, தொழில் தொடங்குதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்றவற்றை செய்துள்ளனர்.

கத்தரில் தான் அதிகபட்சமாக வேலை இழந்தவர்களில் சுமார் 54 சதவிகிதம் நபர்கள் விசா மாற்றி கொள்ளுவதில் உள்ள சட்ட பிரச்னைகள் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். வளைகுடாவிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் வேலை இழந்தவர்களில் பெரும்பான்மையினோர் வேறு நாட்டுக்கு செல்ல விரும்பாமல் அங்கேயே வேலை தேடிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமீரகத்தில் உள்ள சிக்கலான நிலைமையையும் அச்சிக்கலுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டவர்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கையும் எடுத்துக் காட்டுகின்றது.
Source : http://muthupet.org/
வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

No comments: