Friday, April 30, 2010

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!



1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை
1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?

2. தந்தையும் மகனும் விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். தந்தை இறந்தார். மகனுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவரிடம் கொண்டு போனார்கள். மருத்துவர் மறுத்துவிட்டார். “என் மகனுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்” என்று சொல்விட்டார்… இது எப்ப..?

3. உணவகத்திற்குள் நுழைந்த அந்த மனிதர் ஒரு குவளை தண்ணீர் கேட்டார். சர்வர் கோபத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்மேல் பாயவந்தார். தண்ணீர் கேட்ட மனிதரோ நன்றி சொல்லி விடைபெற்றார். ஏன்…?


(பல சர்வதேச நிறுவனங்களில், நேர்காணலின் போது சமயோசிதத்தைப் பரிசோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள் இவை. நிச்சயம் இந்நேரம் விடை கண்டுபிடித்திருப்பிர்கள். உங்கள் விடைகளை உறுதிசெய்து கொள்ள கீழே வாருங்கள்.)

புத்திக்குள்ளே புதையல் வேட்டை ( விடை)
1. பலமாடிக் கட்டிடத்தில் இயங்கும் அந்த லிஃப்டில், உச்சித் தளத்துக்கான பட்டன் அவருக்கு எட்டாது. கீழ்த்தளத்துக்கான பட்டனை இறங்கும்போது எளிதில் அழுத்திவிடுவார். மழைநாளில் குடைகொண்டு வருவதால், குடையை நீட்டி தன் தளத்துக்கான பட்டனை அழுத்த முடியும். குடை இல்லாவிட்டால் நடைதான்…… பாவம்!!
2. அந்த மனிதர், அடிபட்ட இளைஞனின் அன்னை.
3. தண்ணீர் கேட்ட மனிதருக்கு விக்கல் வந்திருந்தது. அதற்காகத்தான் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சி ஏற்பட்டால் விக்கல் நிற்கும். சர்வர் அதைத்தான் செய்தார். தண்ணீர் பருகாமலேயே விக்கல் நின்றுவிட்டது. எனவே நன்றி சொல்லி விடைபெற்றார்

.
Source : http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_23.html

No comments: