Tuesday, June 1, 2010

துயர் மீட்பு குழு மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல் - 15 பேர் பலி!

உணவு, நீர், மருந்து பொருட்கள், மின்சாரம் என அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் துயர் துடைக்க, அத்தியாவசிய உதவி பொருட்களுடன் பலஸ்தீனம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துருக்கி நாட்டு மீட்புக் குழு கப்பல் மீது இஸ்ரேல் கடற்படை கப்பல் நடத்திய தாக்குதலில் கப்பலில் பயணித்த மீட்பு குழுவினரில் 15 பேர் பலியாகினர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது, இஸ்ரேல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்காமல், சர்வதேச சட்டங்களை மீறி அப்பகுதி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல்களையும் இஸ்ரேல் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், அமைச்சர்கள், மனித உரிமை குழுவினர், மருத்துவர்கள் போன்றோர் அடங்கிய மீட்பு குழுவினருடன் உணவு, மருந்து பொருட்கள், துணிகள் ஆகிய உதவி பொருட்களுடன் துருக்கியிருந்து பலஸ்தீன மக்களுக்கு மீட்பு கப்பல் ஒன்று காஸா நோக்கி விரைந்தது.

கப்பல் காஸாவை நெருங்கிய நிலையில் இஸ்ரேல் கப்பல் படையினரால் மீட்பு கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. இஸ்ரேலிய போர் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் அதில் இருந்து இறங்கி, பாலஸ்தீன உதவி கப்பலில் ஏறினர். பின்னர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மீட்பு குழுவினர் மீது கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டடதில் கப்பலிலேயே மீட்பு குழுவினரில் 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் மனிதத்தன்மையற்ற இக்கொடிய செயலுக்கு இஸ்ரேல் வர்த்தக மந்திரி பினியாமின் பென் எலீசர் வருத்தம் தெரிவித்துள்ளார். துருக்கி நாடு, இஸ்ரேலின் சர்வதேச சட்டத்தை மீறிய இக்கொடிய செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் இம்மனித உரிமை மீறலுக்கு எதிராக உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
http://www.inneram.com/201006018647/israel-attacks-gaza-aid-fleetதுயர் மீட்பு குழு மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல் - 15 பேர் பலி!

No comments: