Friday, July 30, 2010

அறிவியலும் தொழில்நுட்பமும் !

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்
  
 

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலை வனத்தில் இருக்கும் மலை உச்சியில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது. பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்பு களையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ் ஞானிகள் ஆராய முடியும். 

                   மாரடைப்பை குணப்படுத்தும் ஸ்டெம் செல்கள் 
 

மாரடைப்பை ஸ்டெம் செல்கள் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களையும் குணப் படுத்த முடியும் என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக் கழக நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர்.

                                       நிலவுக்கு ரோபோ


 

ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ரோபோவை அனுப்ப திட்ட மிட்டுள்ளது. பிக்கோ ரோவர் என்ற பெயருடைய இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இவற்றில் இருக்கும். நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பிவைக்கும்.

                          உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டர்


 

உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் உரு வாக்கியுள்ளனர். இதன் உதவியுடன் இப்போது இருப்பதைவிட மிகச்சிறிய அளவிலும், அதி வேகமாகவும் செயல்படும் சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்களை உரு வாக்குவது சாத்தியமாகும். இந்த புதிய டிரான் சிஸ்டர், ஒரு மீட்டரில் 400 கோடி ஒரு பங்கு நீளமுடையது. மிகமிகச் சிறியதாக இருந் தாலும் இது சாதாரண டிரான் சிஸ்டர்கள் போலவே செயல்படும். இதனை மைக்ரோஸ் கோப் கொண்டே சரியாகப் பார்க்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்லாகும். சிலிக்கானைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. 

Source : http://abulbazar.blogspot.com/2010/06/blog-post_16.html 

No comments: