Monday, September 27, 2010

அக மகிழ்ந்து ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்

 முல்லா நஸ்ருதீன்
அவசரமான உலகில் சிறிது இளைப்பாறி அக மகிழ்ந்து   ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்  கதை நமக்கு உதவும் .
கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நாமும் முல்லா மாதிரியே ஏதோவொரு தருனத்தில் உணர்ந்திருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம்.
முல்லா நஸ்ருதீன் சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார்.

முல்லா நஸ்ருதீன் ஒரு நாள்சோகமாக உட்கார்ந்திருந்தார். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருஙகிய சிநேகிதன்  ஏன் சோகமாக இருக்கிறாய்  என்று கேட்க  முல்லா அழ ஆரம்பித்துவிட்டார். என் மாமா தன் பெயரிலிருந்த சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு  போன மாசம் இறந்துவிட்டார். அதை நினைத்தேன்... அழுகிறேன்... என்றார் முல்லா.
 உன் மாமாவை எனக்குத் தெரியும். அவருக்கு எண்பது வயதாயிற்றே... மரணம்
 இயற்கையானதுதானே... அதற்கென்ன இத்தனை பெரிய சோகம் உண்மையில் பார்த்தால்/ அவரது திரண்ட சொத்து கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் ! என்று முல்லாவுக்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான்... முல்லாவோ/ என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா ! போன வாரம்தான் என் சித்தப்பா/ என் பெயரில் ஒரு லட்ச ரூபாய்
 சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போனார் என்று சொல்லிவிட்டு/ இன்னும் பெரிதாகச் சத்தம் போட்டு அழத்தொடஙகினார். நண்பனுக்குக் குழப்பம் ! உன சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே... அவருக்கு எண்பத்தைந்து வயது... பணம் வந்ததை நினைத்துச் சந்தோஷப்படாமல் முட்டாளைப்போல இப்படி அழுகிறாயே  என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான். என் சோகம் இன்னும் அதிகம். எனது நுறு வயது தாத்தா
 இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலே என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு நேற்று இறந்துவிட்டார் ! என்றார் முல்லா.வெறுத்துப்போன நண்பன் எனக்குப்   புரியவில்லை. நீ ஏன்தான் அழுகிறாய்  என்றான்.முல்லா கண்களைத் துடைத்தபடியே சொன்னார். செல்வந்தர்களான என் மாமா/ சித்தப்பா/
 தாத்தா மூவருமே இறந்துவிட்டார்கள். இனிமேல் என் பேரில் சொத்து எழுதி
 வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே !
 மிக முக்கியமான ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. 

1 comment:

Anisha Yunus said...

நீடூர் அலி பாய், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html