Saturday, June 25, 2011

மத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளத்தவர்களே கோலோச்சுவதன் காரணம் என்ன?


உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகுமளவுக்கு சமச்சீர் கல்வி மேல் ஜெயாவுக்கு என்ன கோபம்? - பாபு, கீழக்கரை.

கனிமொழி, கருணாநிதி எனும் இரு பெயர்கள்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தைக் கருப்பு எம்ஜிஆர் என்று யாரேனும் புகழ்ந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரியாக்சன் எப்படி இருக்கும்? - சுரேஷ்-கோபிச்செட்டி பாளையம்.

கருப்பு எம் ஜி ஆர் எனும் பெயர் விஜயகாந்துக்கு எப்படிப் பொருந்தும்?

சிவப்பு எம் ஜி ஆரையே தேவைக்கு மட்டும் புகழும் ஜெயலலிதாவின் முன் விஜயகாந்தைக் கருப்பு எம் ஜி ஆர் எனப் புகழ்ந்தால் ஜெயலலிதாவின் ரீ ஆக்ஷனுக்கு முன் ர ரக்களின் ரீ ஆக்ஷன் தொடங்கி விடும்.


மத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் இருக்க முடியும் என்பது போன்ற சூழல் நிலவுகிறதே! என்ன காரணம்? - சுரேஷ், மதுரை.
ஒரு வகையில் உன்மைதான்.

1970 வரை டெல்லியில் தமிழர்களின் ஆதிக்கம்தான் இருந்தது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் செயலர் இணை துணை உதவிச் செயலர்கள் எனத் தமிழர் நிரம்பி வழிந்தனர். திராவிடக் கட்சிகளின் கையில் தமிழ்நாட்டு ஆட்சி விழுந்த பின் கல்வித்தரம் குறைந்து தமிழர்கள் பின் தங்க வேண்டிய சூழல் எழுந்தது. கேரளக்காரர்கள் படித்து உயர் நிலையில் வருகின்றனர். கேரளத்தின் எம் பிக்கள் கட்சி வேறுபாடு பாராது டெல்லியில் லாபி செய்து தம் மாநிலத்தவரையே அனைத்து உயர் இடங்களிலும் நிரப்புகின்றனர். இதனால்தான் நீங்கள் வினவியுள்ளது நிகழ்கிறது.

பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி வயிற்றில் அடித்துக் கொண்ட கதிதான் தமிழ்நாட்டுக் கதை.

இதை மாற்ற நம்மால் முடியும்.

வளரும் தமிழ் இளைஞர்களை நன்கு பயிற்றுவித்து ஆட்சிப் பணித்தேர்வுகளில் முதலிடம் பெறச்செய்வதோடு டெல்லியில் பிடியை இறுக்கினால் நம்மாலும் முடியும்
.

தமிழர்கள் அல்லாதோர் தமிழகத்தின் முதல்வர்களாகவும் பிரபல கட்சிகளின் தலைவர்களாகவும் இருப்பதால்தான் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக உண்மையாக பாடுபட மாட்டேன்கிறார்கள் என நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன? - அருள், கத்தர்.

அப்படி இல்லை. முன் விடையில் சொல்லியுள்ளபடி, 1967 இக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனில் முழு அக்கறை கொள்ளாமல் குறுகிய அரசியல் காழ்ப்புப் போட்டிகளில் ஈடுபட்டதால் தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு உண்மையாகப் பாடுபடவில்லை.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது "வாங்கப்பட்டது" என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதைப் பற்றி? - ப.கோ. வசீகரன்.

ஆஸ்கார் பரிசு வழங்கும் கமிட்டிக்கு இந்திய இசையமைப்பாளர் என்று ஏ ஆர் ரகுமானையும் ஸ்லம்டாக் மில்லினியர் படத்தையும் ஒரு குழு அறிமுகப் படுத்தியது. அதனால் நீங்கள் வினவியுள்ளபடி ஒரு பேச்சு எழுந்திருக்கலாம்.


நெசமாலும் தெரியாமத் தான் கேக்குறேன்.. பாபா ராம்தேவைத் தொடர்ந்து நித்யானந்தாவும் ஊழலுக்கு எதிராப் போராடுவார் என எதிர்பார்க்கலாமா வ மு அய்யா? - கண்ணன், மும்பை.

காங்கிரஸ் இனி யாரையும் களத்தில் இறக்காது.


ப. சிதம்பரம் தில்லுமுல்லு செய்துதான் சிவகங்கை தேர்தலில் வெற்றி பெற்றார் என ஜெயலலிதா கூறியுள்ளாரே? - கபீர், அதிரை.

தேர்தல் கமிஷனையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் பேச்சு.

முன்பு ஜெயலலிதா தேர்தலில் தம் கட்சி தோற்றதும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி; எந்திரத்தை நம்ப முடியாது; மீண்டும் வாக்குச் சீட்டு முறையே வேண்டும் என்று அறிக்கை விட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இப்போது எதிர்பாரா வெற்றி பெற்றதும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை நம்ப முடியாது என்று சொன்ன  பேச்சை மறந்து விட்டார்.


SIR,
I WAS SELECTED AS COMPUTER INSTRUCTOR. BUT I DID NOT GET THE PLACE OF POSTING . BUT SOMEBODY SAYS THAT THE NEW GOVT CANCELLED ALL THIS APPOINTMENT. IF YOU KNOW ANYTHING PL TELL TO ME!
- SHEELA THANKOM.

எந்த ஆட்சியில் எந்தத் துறையால் தேர்வு செய்யப் பட்டது என்ற விவரம் உங்கள் கேள்வியில் இல்லை. ஒரு முறை தேர்வு செய்யப் பட்டு நியமன ஆணை வழங்கப் பட்டு விட்டால் அதை யாராலும் ரத்து செய்ய முடியாது. இறுதித் தேர்வு முடிந்த நிலையிலும்  நியமன ஆணை பெறா விட்டால் அதை அடுத்து வரும் அரசு ரத்து செய்து விடும் சாத்தியம் உண்டு.

எதற்கும் நீங்கள் தேர்வு செய்யப் பட்ட சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று விளக்கம் பெற்றுக் கொள்வது சிறந்தது. அரசு வேலை உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துக்கள்.

தகவல் தொடர்பு சாதனங்களின் அட்டகாச வளர்ச்சி, மனித மனங்களின் இடையே அன்பை வளர்த்துள்ளதா, கெடுத்துள்ளதா? - முகுந்தன், குரோம்பேட்டை.

வளர்த்துள்ளது.

உறவினர்களுடன் இ மெயிலில் சாட் செய்வதும் வாய்ஸ் சாட் செய்வதும் நெட்ஃபோனில் பேசுவதுமாக அன்பு வளர்கிறது. ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலம் முகமறியாதோருடனும் தொடர்பு வலுக்கிறது!

போர்க்குற்றவாளி என ராஜபக்ஷேயை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தால் என்ன நடக்கும்? இலங்கையை அமெரிக்கா தாக்குமா? - நடேசன், துபை.

....காது!

அங்கு அமெரிக்காவுக்குத் தேவையானது இல்லையே!.

12 ஆம் வகுப்புக்கு 4050 ரூபாயைப் படிப்பு கட்டணமாக நிச்சயித்துள்ள அதேவேளையில், கருணாநிதியின் குடும்ப நர்சரி பள்ளியின் எல்.கே.ஜி படிப்பு கட்டணம் 24,000 ரூபாயாக அரசு நிச்சயித்துள்ளது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - கலீல் ரஹ்மான், சென்னை.

நீதிபதி ரவிராஜ பான்டியன் குழு இத்தொகையை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டாலின் மகளின்  பள்ளிக்கு மட்டுமின்ரறி வேறு சில பள்ளிகளுக்கும் இது போன்று ரூ 20000 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு. அதே நேரத்தில் சில பள்ளிகளின் உயர் வகுப்புகளுக்கு ரூ 750   கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது வியப்பளிக்கிறது.

கல்விக் கட்டணத்தை உயர்த்த கோரிய மேல்முறையீட்டின் போது ஸ்டாலின் மகளின்  பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்து இருக்கும் பட்சத்தில் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு  அதைப் பரிசீலித்து பாரபட்சமின்றி  ரூ 24000 நிர்ணயித்து இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

இருப்பினும் இந்த கல்விக் கட்டண அறிவிப்பும் பல்வேறு குளறுபடிகளைத் தாங்கித்தான் நிற்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரிய 6400 பள்ளிகளின் விண்ணப்பங்களை நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு மிக மிக குறைந்த கால அவகாசத்தில் எவ்வாறு அலசி ஆராய்ந்து கட்டணங்களை அறிவித்தது என்பது விளங்கவில்லை.

கல்வியும் மருத்துவமும் அரசின் கையிலிருந்து தனியாருக்குச் சென்றதிலிருந்து இந்தக் கொள்ளை நடப்பதை அரசு தடுக்க முடியாமல் தவிக்கிறது. காரணம் அரசின் கையாலாகாத்தனமே! அரசு ஊழியர் என்றால் டாக்டராயினும் நர்ஸ் ஆயினும் துப்புரவுத் தொழிலாளி ஆயினும் ஆசிரியர் ஆயினும், பொதுமக்களை மதிப்பதோ அக்கறையோடு கவனிப்பதோ இல்லை. மாட்டுத் தொழுவம் போல அரசு மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளும் பள்ளிகளும் பளபள என மின்னுகின்றன. அதற்கேற்ப வசதிகளும் உள்ளன. கல்வித்தரமும் அரசு பள்ளிகளைவிட உயர்வாக உள்ளது. அதனால் கட்டணமும் அதிகம் வசூலிக்கப்படுகிறது.


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத யுத்தங்கள் குறித்த சத்தங்கள் குறைந்துவிட்டனவே? யுத்தத்தில் வெற்றி கிடைத்துவிட்டதா? - அம்பிளி, துபை.

பரபரப்புச் சத்தங்கள் குறைந்து விட்டன.\
ஆசைப்படும் முடிவு இழுத்துக் கொண்டு போகிறது.

அரசும் பொதுமக்கள் பிரதிநிதிகளும் உளமாற முயன்றால் நாம் ஆசைப்பட்டது நடக்கும்.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.


Source : http://www.inneram.com/

1 comment:

palanikumar said...

are there no educated from other states like andhra also? definitely no...Only because of their give ANYTHING to achieve mentality only is the reason behind it..We Tamilians
will never do it