Sunday, July 10, 2011

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்






கூகிள் ப்ளஸ் பற்றிய செய்திகளை கடந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். தற்போது கூகுள் ப்ளஸ் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கடந்த ஐந்தாம் தேதி வரையில் கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் கிடைக்காததால் கவலையில் இருந்தேன். நண்பர் ப்ரேம் அவர்கள் அனுப்பியிருந்த அழைப்பிதழை க்ளிக் செய்தாலும் "Keep Me Posted" என்றே சொன்னது. பிறகு கூகிள் ப்ளஸ் Vice president ப்ராட்லி ஹோரோவிட்ஸ் (Bradley Horowitz) அவர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அவர் அனுப்பிய அழைப்பிதழ் மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தேன்.

கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே காட்சி அளித்தாலும் பேஸ்புக்கைவிட கூகிள் ப்ளஸ் நன்றாக இருக்கிறது.
சர்கிள்: 


பேஸ்புக்கில் நாம் ஏதாவது பகிர்ந்தால் அது நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் சென்றடையும். ஆனால் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் என நம் விருப்பப்படி பல குழுக்களாக (Circle) பிரித்துக் கொள்ளலாம். ஒருவரையே எத்தனை குழுக்களில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அவ்வாறு பிரித்துக் கொண்ட பின் குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் நாம் விரும்பியதை பகிர்ந்துக் கொள்ளலாம்.

நம்மை யாரவது அவர்கள் குழுவில் சேர்த்தால் நமக்கு செய்தி வந்துவிடும். ஆனால் எந்த குழுவில் அவர்கள் சேர்த்தார்கள் என்பது நமக்கு தெரியாது. அவ்வாறு அவர்கள் நம்மை சேர்த்த குழுவில் வேறு யார் யார் இருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது.

இது  குறித்து பேஸ்புக்  நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (மறைமுகமாக) குறிப்பிடும்போது,

"குழுக்கள் என்பதன் பொருளே, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பது தான்."

(சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. அவர் கூறியது ஆங்கிலத்தில்,
"The definition of groups is . . . everyone inside the group knows who else is in the group"

இன்னொரு விஷயம் என்னவெனில், நம் அனுமதி இல்லாமலே யார் வேண்டுமானாலும் நம்மை அவர்கள் சர்கிளில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் நீங்கள் ஏதாவ்து பகிரும் முன் கவனித்து பகிரவும்.

ஹேங்-அவுட் (Hang-Out):


(படத்தில் கறுப்பு பின்னணியில் இருப்பது என்னுடைய திரை. நான் வீடியோவை மறைத்திருந்தேன்.)

ஹேங்-அவுட் என்பது குழுவாக வீடியோ சாட் செய்யும் வசதியாகும். அதிகபட்சமாக பத்து நபர்களுடன் நாம் நேரிடையாக வீடியோ சாட் செய்யலாம். பத்து நபர்கள் சாட் செய்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வெளியேறினால், வேறு யாராவது இணைந்துக் கொள்ளலாம். வீடியோ சாட் செய்துக் கொண்டிருக்கும் போதே text Chat-ம் செய்யலாம். இதுவும் கூகிள் ப்ளஸ்ஸின் சிறப்பம்சமாகும். உங்கள் வீடியோவை மறைத்துக் கொண்டும் மற்றவர்களுடன் வீடியோ சாட் செய்யலாம்.

இதன் மூலம் பதிவர் சந்திப்பு கூட நடத்தலாம். ஆனால் பத்து நபர் மட்டும் தான் கலந்துக் கொள்ள முடியும். பத்து நபர்கள் என்பதை அதிகப்படுத்த வேண்டுமென கூகிளுக்கு பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Photo Tag:



பேஸ்புக்கில் உள்ளது போன்று புகைப்படத்தில் Tag கொடுப்பதுதான். ஆனால்  இதில் எளிமையாக இருக்கின்றது. நாம் Tag கொடுக்கும்போது அந்த கட்டத்தின் அளவை நாம் நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி புகைப்படத்தில் முகங்கள் இருந்தால் தானாகாவே கண்டுபிடித்து பரிந்துரை செய்கிறது.

பகிர்ந்துக் கொள்வதில் நான்கு முறைகள்:

பேஸ்புக்கில் உள்ளது போன்றே செய்திகள், சுட்டிகள்(Links), வீடியோக்களை பகிரலாம். கூடுதலாக தாங்கள் இருக்கும் இடத்தையும் பகிரலாம். பகிர்வதில் நான்கு முறைகள் இருக்கின்றன.

1. குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும்  அல்லது ஒரு குழுவினருக்கு மட்டும் பகிரலாம்.

2. தங்கள் உருவாக்கியுள்ள அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கு பகிரலாம். (Your Circles)

3. அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கும், அவர்களின் சர்கிளின் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Extended Circle)

4. கூகிள் உள்ள ப்ளஸ்ஸில் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Public)



பேஸ்புக்கில் வீடியோ சாட்:

பேஸ்புக் தளம் ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்து வீடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அது One to One சாட் தான். அதனை ஆக்டிவேட் செய்ய http://www.facebook.com/videocalling என்ற முகவரிக்கு சென்று, Get Started என்பதை க்ளிக் செய்யவும். பிறகு நீங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் போது மேலே வீடியோ ஐகானை க்ளிக் செய்து சாட் செய்யலாம். 

Video Calling என்ற பெயரில் ஒரு போலியான Application ஃபேஸ்புக்கில் இருக்கிறது. உண்மையில் அது ஸ்பாம் ஆகும். 

மாறிவிட்டது ப்ளாக்கர்:



மாறுகிறது ப்ளாக்கர் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் ப்ளாக்கர் புதிய மாற்றங்களை தரவிருப்பதாக கூறியிருந்தேன். அதன் பின் சிலருக்கு மட்டும் சோதனை முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. சோதனை முறையில் இருந்ததில் சில மாற்றங்களுடன் தற்போது அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முறையில் Edit Html இல்லாமல் இருந்தது. தற்போது Edit Html பக்கம் இருக்கிறது. முன்பைவிட சற்று எளிதாக இருப்பது போல தோன்றுகிறது.

பழைய டாஷ்போர்டை விரும்புபவர்கள், டாஷ்போர்ட் மேலே வலதுபுறம் என்ற இடத்தில் உள்ள பெட்டியை Uncheck செய்யவும்.

ப்ளாக்கர் பெயர் கூகுள் ப்ளாக் (Google Blog) என்று பெயர் மாறப்போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதனை கூகிள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. கூகிள் பிளஸ் முழுமை அடைந்தபின் அறிவிக்கக்கூடும்.
Source : http://bloggernanban.blogspot.com
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

FARHAN said...

கூகிள் பிளஸ் பற்றிய முழுமயான தெளிவு படுத்தும் பதிவு எனக்கு மிகவும் உபயோகமானது