Saturday, July 16, 2011

என்றும் எம் பெருமானே தலைவர்!

  நபியே, நாம் உம்மை இந்த உலகத்தில் உள்ள சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி வைத்திருக்கிறோம் (34:28)
நபியே நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பி இருக்கிறோம் (21:107)
அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான் (61/09)
நபியே நீர் கூறும், ஓ மனிதர்களே, நான் மெய்யாகவே உங்கள் யாவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் (07/158)

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.

நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (Book 7 :: Volume 65 :: Hadith 32)  

"விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது முஸ்லிமின் கடமைகளுள் ஒன்று" என்று நபி(ஸல்...) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  
நூல் : புகாரி

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி) 
நூல்கள்: புகாரி , முஸ்லிம் 

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்) 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம்
"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம்  கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."

-திருக்குர்ஆன் 31:18



No comments: