Monday, August 1, 2011

தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு > நீடூர். A.M.சயீத் B.A.B.L., அவர்கள் பாராட்டுரை.







'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீது'

அல்ஹாஜ் அ.மு.சயீது நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவராக பல ஆண்டுகள் சேவை செய்தவர்.

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் (ரோட்டரி கிளப்) முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவராக இருந்தவர்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ் மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச் செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி