Monday, October 3, 2011

புகைப் பிடித்தலால் ஏற்படும் விளைவுகள்...

பத்து  வயதில் சோள அட்டையினை சுருட்டி விளையாட்டாக நண்பர்களுடன் புகை விட்டுப் பழகியது பின்பு பீடி குடிக்கும் நிலைக்கு வந்து சிகரெட்டாக மாறியது. புகை பிடித்தல் என்பது சிறு பிராயத்திலிருந்தே துவங்கி விடுகின்ற பேராபத்தாகத்தான் உணர முடிகிறது. பல்லாண்டுகள் புகை பிடிக்கும் பழக்கத்தினை  விடமுடியாமல் உடல் பாதிப்பு வந்த பின்பு விட வேண்டிய கட்டாயமாகி விட்டது. புகைப் பிடித்தனால் இழந்த பணம் லட்சங்கள் அதைவிட பாதிப்பு உடல் நலம் . புகை பிடிப்பது தன்னை தானே அழித்துக் கொள்வதுதான் இதுவும் தற்கொலைக்கு சமமானதுதான்.புகைப் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு! புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.  தற்கொலை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. தற்கொலை செய்துக் கொள்பவர்களுக்கு சுவனமில்லை. புகைப் பிடித்தல் தற்கொலைக்கு சமம். உடன் இருப்பவர்களின் உடல் நலத்தினையும் பாதிக்கும். அதனால் புகைப் பிடித்தல் ஹராமினைத்   தாண்டிய குற்றத்தில் அடங்கும்.
 

சமுதாயத்தில் காணப்படும் மிகக் கெட்ட பழக்கத்தையும் இங்குச் சுட்டிக் காட்டியாக வேண்டும்.நோன்பின்போது இதனை விட்டு விலகி இருக்கும் சகோதரர்கள் நோன்பைத் துறந்தவுடன் உடனடியாக பள்ளிக்குச் சென்று மக்ரிபு தொழுகிறார்களோ இல்லையோ, புகைபிடித்தலில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது ஏனெனில், நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
----------
புகைப் பிடித்தல் விடுவதால் ஏற்படும் நன்மைகள்.

புகை பிடித்தல் நிறுத்திய ஒரு சில நாட்களுக்குள், உங்கள் சுகாதாரம் குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்ததனை உணர்வீர்கள். நுரையீரல் செயல்பாடு அதிகரித்து மற்றும்  பொதுவான உடற்பயிற்சி அளவுகள் வளர்ச்சி சேர்ந்து அதிகரிக்க இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு காரணமாக உடல் நலம் முன்னேற்றமடையும்.
நிச்சயமாக சுவாசம் மிகவும் மேம்பட நுரையீரலில் மிகவும் அருமையாக  (புகைக்கும் போது இருந்ததை விட) இயங்குகின்றன என்று கூறுவீர்கள். சளி,இருமல் இவைகள் இல்லாத ஆரோக்யமான வாழ்வு மலரும் . மணம் மற்றும் சுவை  உணர்வு மேம்படுத்திக்கொள்ள  சரியான நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். பின்பு பசி அதிகரிக்கவும் சுவை அறிய முடியும் . மாரடைப்பு ஆபத்து நீங்குகின்றது.பல பிரச்சினைகள் ஆபத்துக்களை குறைக்கும்
இழந்த பாலியலில் மாற்றம் உண்டாகி பாலியல் உணர்வு அதிகரிக்கும். மனைவியுடன் மகிழ்வாக இருக்கும்  நிலை வருவதால் எப்பொழுதும் சுறு சுறு ப்பாக செயல்பட குடும்பமே மகிழ்வுதான். சகிப்பு தன்மை அதிகரிக்கும் மற்றும் சில வாரங்களில்  நன்றாக தூங்கம் கிடைக்கும்.  இதனால் புத்துணர்வு ஏற்பட்டு மன மகிழ்வுடன் 
வாழ்வீர்கள்.

No comments: