Friday, October 14, 2011

சமைத்த உணவை ருசி பார்க்கத் தெரியும்!

தேர்தல் என்றால் கட்டுப்பாடுகள் உள்ளன .ஒலிப்பெருக்கியில் அலற விடுவது இரவு நெடு நேரம் பிரச்சாரம் செய்வது நினைத்த  இடத்திலெல்லாம் தேர்தல் போட்டி போடுபவர் விளம்பரங்கள் (நோட்டிஸ் ) ஓட்டுவது இவைகளெல்லாம் சேஷன் கட்டுப்பாடுகளை விதிக்க பாராளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலில்   அரசியல்வாதிகள் கட்டுப்பட்டு நடந்தனர்.  இருப்பினும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த  கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமையால் மாநகராட்சி,  நகராட்சி,உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களால்    மக்கள் அவதிக்கு  உள்ளாகி தற்பொழுது சிரமப் படுவதனை காண முடிகின்றது. வீட்டின் சுவர்கள் அழகு கெட்டு  நாசமடைத்து நிற்கும் நிலை.

  தேர்தல் அறிக்கை மனதைக்  கவரக் கூடியதாக இருப்பதனை கண்டு மயங்க வேண்டாம். தேர்தல் அறிக்கை...அறிக்கையை நம்பாதீர்கள் ...
 நீங்கள் அடைந்த தொல்லைகளும், வாய்ப்புகளும், நன்மைகளும் உங்களுக்கு பாடமாக இருக்கட்டும் . நமக்கு சமைக்க தெரியவில்லையென்றாலும் சமைத்த உணவை ருசி பார்க்கத் தெரியும். அவர்கள் ஆண்ட முறை அறிதிருக்க உங்கள் வாக்கு முறையாக பயன் படுத்தப் படட்டும்.

Photo source
மின்சாரம் ஒரு சமாசாரமாகி சம்சாரதுடன் சண்டை பிடிக்க வாய்பு உண்டாக்கியவர்கள் யார் ? அந்தப் பிரச்சனைக்கு  தீர்வு
எப்பொழுது தீர்வு . அது ஆள்பவருக்கு தெரியாது! ஆண்டவனுக்குத் தான் தெரியும். திருடனை பிடிக்க முயல்வோர் திருட்டு போகாமல் இருக்கவும் வழி காண வேண்டும் .நம்மிடம் இருந்தால் தானே அதைப் பற்றி சித்தனைச் செய்ய? என்று எண்ணாதீர்கள்! உங்களுக்கும் ஒரு காலம் வரும்! 


இறைவணக்க இடமான பள்ளிவாசலிலும் தேர்தல் பிரசாரங்களால்    மக்கள் அவதி . நீடூர்  பள்ளிவாசல் சுற்றிலும் வேட்பாளர்கள்.தொழுவதும், அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டிய இடத்தில தேர்தல் விளம்பரங்கள் (நோட்டிஸ்) படிக்கும்  நிலைக்கு தள்ளப் பட்டு விட்டார்கள் 
Photo Source

No comments: