Sunday, November 13, 2011

தர்மமும் வாழ்த்தும் தரும் சிறப்பு

 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(...யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.

Bukhari :: Book 8 :: Volume 74 :: Hadith 253
(Photo : Food Aid - Gaza)
...
Narrated 'Abdullah bin 'Amr(RA):
A man asked the Prophet, "What Islamic traits are the best?" The Prophet said, "Feed the people, and greet those whom you know and those whom you do not know."
"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்."
- நபி (ஸல்) 

நூல்கள்: புகாரி, முஸ்லிம் 

"இறந்த என் தாய்-க்காக நான் செய்ய எது சிறந்த தர்மம்?" என நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்.

"தண்ணீர் வழங்குதல்" என்றார்கள்.

அறிவிப்பவர்: சாது பின் உபதா (ரலி)
நூல்: நஸயி 3604
எப்பொருள் தர்மமாக கொடுத்தாலும் இன்னும் சிறிது சேர்த்துக் கொடுத்தால் நல்லது என்று எண்ணுவர், போதும் என்ற மன நிறைவு வராது. ஆனால் உண்ண உணவு கொடுத்தால் அவர் வயிறு நிரம்பிய பின் போதும் என சொல்வார்கள். ஆதலால் பசித்தவருக்கு உணவளிப்பது சிறந்த தர்மமாகும்
நாம் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் 'சலாம்' வாழ்த்து சொல்வது சாதாரணமாக உள்ளத்திலிருந்து வராமலிருக்கலாம் ஆனால் பதில் சொல்பவரின் வாழ்த்து ஆழ் மனதிலிருந்து வந்து விட அந்த வாழ்த்து நமக்கு மிகவும் உயர்ந்த பலன் தந்து விடும் .ஆதலால் காண்பவர் அனைவர்க்கும் 'சலாம்' வாழ்த்து சொல்லி பயனடையுங்கள்.

No comments: