Thursday, December 1, 2011

விதி வாழ்வின் ஒரு பகுதி.


 வேட்டைக்காரன் காட்டுக்கு வேட்டையாட சென்றான் . மரத்தின் மேல் கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் குறி வைத்து அம்பு எய்தினான். குறி தவறியது. ஆனால் அவன் எய்த அம்பின் வில் அவன் தலையில் வீழ்ந்து அவன் மாண்டான். அந்த வழி வந்த  நரி  அந்த அம்பின்  நாணலைக் கடிக்க அந்த அம்பின் நாணல் அறுந்து  நரியின் பொட்டில் தாக்க நரி மாண்டது.
புறா பறந்து தப்பித்தது ஆனால் மனிதனும் இறந்தான், நரியும் மாண்டது. இதுதான் விதி. விதி வாழ்வின் ஒரு பகுதி .விதியை   மதியால் வெல்ல முடியும் என்பர்.அதனை ஆராய்ச்சி செய்ய முயல்வது இரண்டு கால்களையும் நின்றபடி தூக்க  முயலும் நிலைதான். விதியினை வெல்வோர் யார்! விதியின் பெயரைச் காரணம் காட்டி ஒரு காரியத்திலும்  ஈடுபடாமல்  இருந்தால் வாழ்வு ஒரு காணல் நீர்தான்.  அது இறைவன் வசம்தான் உள்ளது . மனமுறுகி இறைவனை வேண்டினால் அது மாற்றப் படலாம். 

  நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்து

4:78. ''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது'' என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ''இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; ''எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!''

No comments: