Friday, December 23, 2011

சில ஆண்களின் ஆசை இரண்டாம் திருமணம்!

ஆண்களின் நடக்காத ஆசை இரண்டாம் திருமணம்!
போர் நடந்த நாடுகளில்  போரின் விளைவினால்  பல ஆண்கள் இறந்து விடுவதனைப் பற்றி  நாம் அறிவோம் . இது ஈரான்  வியட்நாம் நாடுகளில் நடந்தபோது ஆண்கள் போரில் மாண்டுபோய் பெண்கள் மிகைத்து இருந்த கொடுமை அதிகம் . போர்களில் அதிகமாக கொல்லப்படுகிராகள். 

கணவனை இழந்த பெண்களே அதிகம்.  பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது. அந்த நிலையில்  பெண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள மண முடிக்காத ஆண்கள் கிடைக்காத நிலை. குறிப்பாக  வியட்நாமில் பெண்கள் தவறான பாதையை மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.ஈரான் போர் முடிந்த நிலையில் அந்த நாட்டின் முக்கியமானவர்  இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கொடுத்து அந்த  மனைவியருக்குள்  நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் அது இஸ்லாம் அனுமதி தந்த முறைப்படி இருக்க வேண்டும் என  அறிவித்தார்.

‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.

குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.

மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
   இரண்டாம் திருமணம் பற்றி   ஒரு பெரியவர் பேசுவதனைக்  கேட்க நேர்ந்தது.   'ஆண்களில் பலருக்கு அந்த எண்ணம் இருந்தாலும் மனைவிக்கு பயந்து அதனை செய்வதில்லை மற்றும் ஒரு மனைவியை வைத்து குடும்பம் நடத்துவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில்  இரண்டாம் திருமணம் பற்றி நாம் எப்படி இந்த கால கட்டத்தில் யோசிக்க முடியும் எனக்  கூறினார்'.
  ஆகா! நல்ல செய்தி கிடைத்து விட்டது என்ற ஆர்வத்துடன் அந்த பெரியவர் சொன்ன இரண்டாம் திருமணம் பற்றி எனது மனைவியிடம்  சொன்னேன். அவள் சொன்ன ஒரே பதில் ' இத்தனை நாட்கள் அவர் செய்த பல நல்ல பிரசங்கங்களைப் பற்றி சொல்லாமல் இதனைப் பற்றி மட்டும் ஏன் சொல்கின்றீர்கள்' என வினவினாள். நான் வாய் அடைத்துப் போய் அமைதியானேன்.   

No comments: