Saturday, February 11, 2012

மாணவர்களுக்குக் கடும் தண்டனை கூடாது!

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் விதத்திலான கடும் தண்டனைகள் கூடாது" என மெட்ரிகுலேசன் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் குத்திக் கொன்றான். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியது.

இந்நிலையில், மெட்ரிகுலேசன் இயக்ககம் மாணவர்கள்-ஆசிரியர்கள் இடையே இணக்கம் அதிகரிக்க சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரச்சனை வராதவாறு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் வகையில் கடுமையான தண்டனை கூடாது."

என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், "இந்தக் கல்வி முறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source : http://www.inneram.com

No comments: