Tuesday, March 27, 2012

'பதிவுலகத் திருடர்கள்' என ஓலமிடும் பதிவுலவுர்களின் திருட்டு புதுமையானது!


 . 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-80.


திட்டுவதுபோல் திட்டி வாழ்துவதுபோல் வாழ்த்தி குழப்பம் உண்டாக்குவதில் வல்லவர்கள் சிலர் . உங்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த அறிவு! இறைவன் கொடுத்த அருளை வளர்த்துக் கொண்டீர்கள். பழைய இலக்கியங்களை எடுத்து கையாள்வது இலக்கிய திருட்டு ஆகாதா? ஒரு ஆசிரியர் தான் கொடுத்த, பயிற்றுவித்த அறிவித்த அறிவை மற்றவர் பயன்படுத்துவதைக் கண்டு பெருமிதம் கொள்வதுதான் சிறப்பு . பிறக்கும்போதே அறிவோடு பிறப்பது அறிது.
உங்களில் உயர்ந்தவர் யார் என கேட்கும் போது 'பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றிவைத்தவர் உங்களில் உயர்ந்தவர்' என நபிகள் நாயகம் நவின்றார்கள். புகழுக்காகவும் ,பொருள் நாடியும் எழுதுவோர் இருந்தும் மக்கள் பயனடையவேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் நம் முன்னோர்கள் .அது மட்டுமல்ல அறிவை பகிர்ந்துக் கொள்ள முடியாமல் ஆன்றோர்களால் இருக்க முடியாது. படிக்கும் பொழுது காப்பி அடித்தவர் பின் அவர் தேர்வு எழுதும் பொழுது அவர் காப்பி அடித்தது  நினைவுக்கு  வந்து சிறப்பாக எழுதியவர்கள் ஏராளம் . காப்பி அடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் .பின் அதுவே  அவரை அறியாமலேயே அவர் சொந்தமாக எழுதும் ஆற்றலைக்  கொடுத்துவிடும்  . கணினியை கையாளும் கலை அறியாமல்  முதலில் அதில் சில காப்பி கட்டுரை வரும் . பின்பு தன் முயற்சி தானே வந்தடையும். அறிவு உங்களுடன் அடைந்துக் கிடக்கும்போது ஒரு பயனுமில்லை .அது வெளியே வந்துவிட்டால் பொதுவுடமையாகி விடுகின்றது . பழமொழிக்கு   ஆசிரியர் யார்? அதனை நீங்கள் ஏன் கையாள்கின்றீர்கள்! சொன்னவர் "யாரோ" என்று போட்டு எவ்வளவோ அருமையான மேற்கோள்களை நாம் போடுகின்றோம் . பாதுக்காப்பு உரிமை வாங்கிக் கொண்டு  பின்பு எழுதி வாருங்கள் .உங்கள் எழுத்தினை எவ்வளவு பேர் படிகின்றார்கள் என்று பாருங்கள் அல்லது புத்தமாக வெளியிடுங்கள்  அப்பொழுது அறிவீர்கள்! பாடப் புத்தகமாக வரும்போது கட்டாயமாக வாங்க வேண்டிய அவசியமாகின்றது. அரசு தேவை இல்லாததை இனாமாக அள்ளி அள்ளிக் கொடுக்க உங்கள் அறிவை கொடுத்து மகிழுங்கள் .அது இறைவனது சொத்து. அது உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும்.
 
'நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
 பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..

என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...  
மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி  மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.'
-முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.

 தயவு செய்து இதனை கிளிக் செய்து படியுங்கள்   எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாத..

தயவு செய்து இதனை கிளிக் செய்து படியுங்கள்   அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!


Please click here to read No Copy right in Islam  http://seasonsali.blogspot.in/

No comments: