Tuesday, April 10, 2012

உணர்வும் அதன் உண்மையும் !

காண்பதும், படிப்பதும், எழுதுவதும் உணர்வைத் தூண்டக்  கூடியதாக அமைவதனைக் காண முடிகின்றது. உணர்வு இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. அந்த உணர்வுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு வேறுபடுகின்றது. பாதகமான,தவறான உணர்வுகளை   தூண்டக்  கூடிய காட்சிகளும் எழுத்துகளும் தடுக்கப்பட வேண்டும்.அது மக்களுக்கு பல் வகையில் கேடுகளை தந்து பாதகமான் விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது.  மித மிஞ்சிய உணர்ச்சியும் , உணர்வும் உடல் நலத்தினையும் பாதிக்கும். உணர்வை முறையான வகையில் வெளிப்படுத்த வேண்டும். அது கேலிக்கு இடம் தந்ததாக அமைந்து விடக் கூடாது . மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,புரிந்துக்கொள்ளாமல் செயல்படுவது எத்தனை மடத்தனம். இறந்தவர் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் மற்றவர்களுடன் சிரித்துப்  பேசி உணர்ச்சி சிதறிப் போகும் நிலையை உருவாக்கி இருக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் நடந்துக் கொள்ளாமல் தங்களது உணர்வு சிதறிப் போக முனைபவர்களைப் பார்க்க முடியும். சூழ்நிலைகளுக்கு   பொருத்தமற்ற விதத்தில் நடந்துக் கொள்வது உணர்வுபூர்வமாக படிப்பறிவில்லாத அறிவில்லாதவராக அவர் மற்றவருக்கு காட்சி தந்து அவரை மற்றவர்கள் கேவலமாக மதிக்கின்றனர்

 
  உண்ணும் உணவு உடம்போடு கலந்து உடலை உந்தச் செய்ய வழி வகுப்பதுபோல் உணர்வும் உடம்போடு கலந்துவிட வேண்டும் .அது நன்மை தரக்கூ டிய  உணர்வாக இருப்பது அவசியம். இறைவன் மீது பற்று வைத்து அது  இறை  உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும். நம்முள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர வேண்டும். அது நல்லுணர்வை உண்டாக்கும் .அது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவைக்கு வழி  வகுக்கும் . இறை உணர்வு உள்ளோர் மக்கள் மீது பற்றுக் கொண்டு தன்னிடத்து நல்லுணர்வை உண்டாக்கிக் கொள்வதுடன் மக்களைப் புரிந்துக் கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சேவை  செய்ய  முற்பட்டு மனமகிழ்வார்கள்.  

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

இதுவே உணர்வின் மகத்துவம்

No comments: