Sunday, April 22, 2012

பிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுலா வழிகாட்டி

 பிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுலா வழிகாட்டி


  பிரயாணங்கள் மேற்கொள்வது பல காரணங்களால் இருக்கக் கூடும். பிரயாணங்களில் விமானப் பிரயாணமும் அடங்கும். விமானப் பிரயாணம் மேற்கொள்ளும்பொழுது சில அடிப்படையான விஷயங்களை நாம் அறிந்துக் கொள்வது நமது பயணத்தினை எளிதாக்க வழிவகுக்க இந்த விளக்கப்படம் உதவியாக இருக்கும்.  நாம் பயணம் செய்யும் போது 
எடுத்துச் செல்லும் 'கேரி-பேக்கில்' எந்த பொருள்களை எடுத்து செல்லலாம் எதனை கொண்டு செல்லக் கூடாது என்பனவற்றை நாம் தெரிந்துக் கொண்டால்  விமான நிலைய பாதுகாப்பு வளையத்தில் ஒரு தொந்தரவும் இருக்காது.


நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.


“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.


பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக அத்துத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக அத்தில் குல் யா அய்யு அல் காபிரூன்  இரண்டாவது ரக அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்  ஓதுவது சுன்னத்தாகும்.

 தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷி யையும் லி ஈலாபி குரைஷி யையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத் தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.

நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.

அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு

 வீட்டில் இருந்து வெளியேறும் போது

பிஸ்மில்லாஹி  தவகல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி

ஆதாரம்: திர்மிதி

வாகனத்தில் செல்லும் போது

ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்

அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூ தாவுத்



  What’s In Your Bag?
Compiled by: Travel Insurance Guide

No comments: