Monday, May 28, 2012

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு - கருத்தாடல் 1


அப்துல் லத்தீப் - அர அல: அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.

அன்புடன் புகாரி: இப்படியான இரு நிலைப்பாடு நான் அறிந்து இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. சரியான புரிதல் இல்லாமையே இரு நிலைப்பாட்டிற்கான காரணமாக இருக்க முடியும். ஆகவே நம் புரிதலில் எங்கோ தவறிருக்க வேண்டும் என்று அழுத்தமாக நம்புகிறேன்.

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர். தெளிவினை நோக்கிய ஆய்வுக் கட்டுரைகளை நான் தேடுகிறேன்.

*ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்* என்று நபிகள் ஓரிடத்தில் கூறியதாக அறிகிறோம். இதை எப்படிப் பொருள் கொள்வது?

--கவிதை என்பது ஒருவகை உணவு
--அது ஒருவனின் வயிற்றில் நிரம்பக்கூடியது
--ஒருவனின் வயிறு சீல் சலத்தால் நிரம்பி இருக்கலாம், அதனால் கேடு ஒன்றும் இல்லை

என்றெல்லாம் பொருள் கொண்டால் எப்படி இருக்கும்?

குர்-ஆனும் சரி ஹதீசும் சரி ஒருவகையான கவிதை நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருப்பதையே காண்கிறோம். அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால் எனக்குப் புரிவதில் தகராறு உயர்கிறது. உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே Physical-உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? Logical-அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

எனக்கு அடிப்படையிலேயே ஒரு கேள்வியுண்டு. இறைவனை ஏன் ஆண்பாலாக மட்டுமே அவன் இவன் என்று சுட்டுகிறார்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

என் ஆராய்ந்தறியும் நம்பிக்கை உருவமற்றவன் இறைவன் என்பதில்தான் அழுத்தமாக நிற்கிறது.
Source : http://anbudanbuhari.blogspot.in/

'லாஇலாஹா இல்லல்லாஹ்' - தனித்தவன், இணையற்றவன்.

தயவு செய்து இதனை க்ளிக் செய்து படியுங்கள்   Al-Ikhlas (Arabic: سورة الإخلاص ) aka At-tawhid (سورة التوحيد) (Monotheism) is the 112th Sura of the Qur'an. It is a short declaration of tawhid, God's absolute unity, consisting of 4 ayat. Al-Ikhlas means "the purity" or "the refining", meaning to remain pure and faithful or a state of purging one's soul of non-Islamic beliefs, such as paganism and polytheism.

This sura establishes the Oneness of the Creator: the doctrine of Tawhid. It says that God is without equal, without origin, without end, and unlike anything else that exists. The fourth line, "Nothing is like Him", is a fundamental statement of tanzih; God as the incomparable.

2 comments:

demha said...

அஸ்ஸலாமுஅலைக்கும்...
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது ஆனால் இன்ன உருவம் என்பதை நாம் அறிந்துக் கொள்ள சாத்தியம் இல்லாதவர்களாக இருக்கிறோம். இதன் அடிப்படையில் அல்லாஹ்விற்கு உருவம் (அறியப்பட)இல்லை என்றாகிறது.

demha said...

அஸ்ஸலாமுஅலைக்கும்..
அல்லாஹ்விற்கு நிச்சயமாக உருவம்
இருக்கிறது. ஆனால் இன்ன உருவம் என்று நாம் அறிந்துக் கொள்ளும் சாத்தியம் இல்லை .
இதன் அடிப்படையில் அல்லாஹ்விற்கு உருவம் (அறியப்பட) இல்லை.