Monday, May 28, 2012

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு - கருத்தாடல் 2

 அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64


இதன்படி அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். அதனால் இறைவன் உருவம் உடையவன் என்கிறார்கள். ஆனால் மேலே உள்ள வசனத்தை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்று பார்க்கலாம். குர்-ஆன் வசனங்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன. அவற்றுக்குக் கவிதைமனம் கொண்டவர்களால்தான் சரியாக விளக்கம் கூற முடியும்.

அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று யூதர்களைப் பார்த்து இந்த வசனம் இறங்கி இருக்கிறது. இந்த வசனம் இறங்கியபோது, யூதர்களின் கைகள் கயிற்றால் பிணைத்து கட்டப்பட்டு இருந்தனவா? இல்லையே? பிறகு ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது?

ஒருவனின் கைகள் கயிற்றால் கட்டப்படாதிருக்கும்போது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் நிற்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதற்கு என்ன பொருள்? தன்னால் இயன்றதை தன்னால் செய்யமுடியாத இக்கட்டில் நான் நிற்று தவிக்கிறேன் என்று பொருளல்லவா?

யூதர்களின் கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று கூறினால், யூதர்களால்தான் எதையும் செய்யமுடியாது என்று இறைவன் கூறுவதல்லவா? குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது அபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். அறிவுடையோனாய் இருப்பவனே இஸ்லாமியன் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. நம் அறிவை முழுவதும் பயன்படுத்திச் சரியான பொருளை விளங்கிக்கொள்வது தேவையான ஒன்றல்லவா?

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று யூதர்கள் சொன்னால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வால் எதையும் செய்யமுடியாது என்று ஏளனம் செய்து அதை நம்பவும் வைத்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கமல்லவா? அதற்காகவே தொடுக்கப்பட்ட ஏளனச் சொற்கள் அல்லவா அவை?

இங்கே கைகள், கைகள் என்று கூறுவது, யூதர்களுக்கும் வெறும் கைகள் அல்ல, இறைவனுக்கும் வெறும் கைகள் அல்ல என்பது தெளிவாகிறதா?

இங்கே கை என்பது சக்தி. ஆகவே அந்தக் குர்-ஆன் வசனத்திற்கு என் விளக்கம் இதோ:

அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியாது அதற்கான சக்தி அவனிடம் இல்லை என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்களுக்குத்தான் எதையும் செய்யக்கூடிய சக்தி இல்லை. இப்படி யூதர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வோ எதையும் செய்யக்கூடிய வல்லமையை வேண்டும் மட்டும் பெற்று இருக்கிறான்

Source : http://anbudanbuhari.blogspot.in/

'லாஇலாஹா இல்லல்லாஹ்' - தனித்தவன், இணையற்றவன்.

தயவு செய்து இதனை க்ளிக் செய்து படியுங்கள்   "அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

No comments: