Tuesday, May 1, 2012

தொடரும் காலத்தினை பின் தொடரும் நம்பிக்கையான நபர் !


 தொடரும்  காலத்தினை பின் தொடரும் நம்பிக்கையான நபர்  மனைவியாகத்தான் இருக்க முடியும் . ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள் (தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும்)

காலமெல்லாம் கனிவும்,பாசமும், பேணிக் காக்கும்  சேவையும் பகிர்ந்துக்  கொள்ளும் மகிழ்வுகளும்,  சந்ததிகளை தொடரவைத்து நமக்காக சரித்திரம்  படைக்கப் பாடுபடும் தொண்டு மனமும் மனைவி கிடைத்ததால் நாம் அடைந்த பாக்கியம்.
"இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்;... (Surah Al Nahl 16:72)

 இன்ப துன்பங்களில் பங்கு  கொள்வதுடன் நாம் அடையும் வெற்றி தோல்விகளிலும் தோள் கொடுத்து நம் நிலையை தடுமாற விடாமல் பாது காப்பவள் மனைவி.  மனைவியுடன் அன்பு கலந்து நிற்பதால் மனிவியுடன் கிடைக்கும் மகிழ்வுக்கு எல்லை இல்லை. 
மனதில் துக்கம் வரும் போது நெஞ்சை வருடிவிடும் ஆறுதல் அளிக்கும் கலப்படமற்ற மாமருந்து. 
உயிர் வாழ உணவு ஓய்வின்றி உணவு செய்து கொடுத்து  வருவது முதல் ஆடைகளை துவைத்து கொடுப்பது வரை வீட்டினை சுத்தம் செய்வதிலும்  தனது சேவையை தொடர்ந்து ஈடுபட்டு குடும்பத்தினை பாதுகாத்து வரும் மாண்பு. ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லையென்றால் அந்த வீடே ஒளி இழந்த வீடாக காட்சியினை அறிய முடியும். மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள். மனை=வீடு = வி=விளங்கச்செய்பவள்



  நண்பனும் உடன்பிறன் பிறப்புகளும் துன்பமான நேரத்தில் பிரிந்து மறைந்தாலும் ஊன்றுகோலாய் உடன் இருந்து இணைத்து வாழ்பவள் மனைவி. 
 கணவன் மனைவிக்கு ஆடை. மனைவி கணவனுக்கு ஆடை. ஆடை  நூல் இழையினால் பின்னப்பட்டதுபோல் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பின்னப்பட்டுள்ளனர் . ஆடை நம் மானத்தினை காக்கும் அணிகலம், அதுபோல் கணவன் மானத்தினை மனைவியும் மனைவியின் மானத்தினைக் கணவனும் காக்கும் ஆடையாக வாழ்வது சிறப்பாகும்       

  அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (Surah Al Baqarah 2:187)., 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(Surat An-Nisā'4:1)

 எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (அல்குர்ஆன் 25:74)
  நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.--திருக்குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.--திருக்குறள்
மனைவியின் அருமை அறிய முதுமை தேவை,

1 comment:

ப.கந்தசாமி said...

//மனைவியின் அருமை அறிய முதுமை தேவை,//

உண்மை