Wednesday, May 2, 2012

உலக நாடுகளின் வாடகை விபரத்துடன் துபாய் வாழ்வும்!


தனி வீடு கட்டுவதை விடவருமானத்திற்கு தகுந்ததுபோல்  வாடகை வீட்டில் வாழ்வது பல வகையில் உகந்ததாக உள்ளது என்று நினைக்கும் போது வாடகை வீட்டின் வாடகை நம் வருமானத்திற்கு தகுந்ததுபோல் உள்ளதா! என்று சித்திப்பது அவசியமாகின்றது. வருமானத்தில் வீட்டு  வாடகை கொடுத்தே பணம் செலவாகிவிடுகின்றது. நாட்டிற்கு நாடு,நகரத்திற்கு நகரம் தங்கும் இடத்தின் வாடகை வித்தியாசமாக உள்ளது. நாம் வெளிநாடில் சென்று பணம் ஈட்டி வரலாம் என்றால்  முதலில் நம் நினைவுக்கு வருவது துபாய்தான். அங்கு இருப்பவர்களை கேட்டால் சம்பளம் நிறையவே கிடைகின்றது ஆனால் கிடைக்கும் சம்பளத்தில் வாடகை கொடுப்பதிலும்,நீர் வரி,போக்கு வரத்து செலவு  மற்றும்   உணவுக்காகவும்  இன்ன பிற  செலவுக்காகவும் பணம் செலவாகிவிடுகின்றது என  சொல்கின்றனர். கொடுப்பதுபோல் கொடுத்து திரும்பவும் அந்நாட்டிலேயே செலவழித்து விடும் அவசியத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் அதனால் தங்க இடம் கொடுப்பதுடன்  துபாய்க்கு வேலைக்கு செல்வதுதான்  நன்மை தரும்.


துபாயில் வாடகை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடுமையாக வேறுபடலாம், ஆனால் சராசரியாக, எமிரேட் உள்ள குடியிருப்பாளர்கள் அவர்கள் வாழும் வீட்டிறகாக  செலுத்தும் வாடகை தங்கள் வருமானத்தில் 15 சதவீதம் மற்றும் 30 வரை செலவாகின்றது.

 வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.



திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

 




No comments: