Saturday, May 5, 2012

யாரால் இது முடியும்! முயலுங்கள் வெற்றி வரும் ...!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.- திருக்குறள்

  ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி) - குர்ஆன்
குர்ஆன் - மக்கீ, வசனங்கள்: 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
96:1    اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2   خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3   اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4   الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5   عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

  கவிதையின் மாண்பில் ஒன்று, அழகுபட வார்த்தைகளைத்  தெளித்து அதனைப் படிப்பவர்களின் ஆழ மனதில்  பதிய வைத்து காலமெல்லாம் நினைவில் நிறுத்தக்  கூடிய ஆற்றலை தன்னகத்தே  கொண்டது. மொழியின் அழகிய மாண்பினை இலக்கிய நயத்துடன் கொடுப்பதே கவிதை . இது மொழிக்கு கூடுதலாக அழகு தரும் .இனிமையும் ஆழ்மையான கருத்தையும் தரவல்லது.  மொழிபெயர்ப்பு கவிதையில் மூலத்தின்  அடிப்படைக் கருத்துமற்றும் அதன் பொருள்  மாறாமல் கவிதையின் வார்த்தை வளத்திற்கு முக்கியம் கொடுக்கப் பட்டிருக்கும்.

“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”
- கண்ணதாசன்
கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! + கண்ணதாசன் குரானை ஏன் மொ...
Source

 கவிதையில் வரும் சொல்லாடல்கள் கவிஞனுக்கே கிடைக்கப் பெற்ற தனி கலை மற்றும் அது அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அட்சய பாத்திரம். கவிஞன் பிறக்கிறான் பேச்சாளன் உருவாக்கப்படுகின்றான். கவிதை எழுதும் வல்லமையை ஒரு சிலருக்கே இறைவன் தந்துள்ளான். கவிதை எழுதும் இலக்கணம் படித்து அறிந்தவர்கலெல்லாம்  கவிதை  எழுத முடியாது. அது ஒரு ஊற்று,அருவி,மழை மற்றும் இயற்கையாக அமைந்தது. நினைத்தபோது கொட்டும் நினைத்தபோது நின்றும் விடும்.

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்",..-

'கண்ணுக்கு மை அழகு,கவிதைக்கு அழகு  பொய்" என்பார்கள்.அது பொய்யாக எழுதப்பட்ட கவிதை. பொய் போன்று தோன்றும் கவிதை வரிகளில் அடங்கி இருக்கும் உண்மையை விளங்கிக் கொள்ள முடியாதோர் தந்த சொற்கள் அவை. அதனால்தான் வேகமாக இது (கவிதைக்கு அழகு  பொய்)பொய் வேகமாக பரவுவது போல் பரவி விட்டது. அறவே பொய் கலக்காத  கவிதைகள்   ஏராளம். அதில் இலக்கியத்தின் இனிமையும் சரித்திரத்தின் சான்றுகளையும் காண முடியும்.  கவிதை வடிவில் வந்த காவியங்களும் வேதங்களும் (குர்ஆன்) பல கோடி மக்கள் மனதில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
  எத்தனையோ கவிதைகளை பாடமாக சொல்லித் தருகின்றனர், இறைவேத நூலாக வந்துள்ள குர்ஆனை வாழ்கையின் வழிகாட்டுதலாக எடுத்து வாழ்கின்றனர் .

No comments: