Sunday, May 27, 2012

இருட்டைக் கண்டாலே பயம் !


இருட்டைக் கண்டாலே பயம்.  மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது. இரவு நேர இருட்டில் திருடன் வந்துவிடுவான் என்ற அச்சம் காலம் மாறிப்போச்சு பகலிலேயே திருடன் திருட வரும் காலம்.  அக்காலத்தில் சொல்வோம்  'பகல் கொல்லைக்காரன்' என்று . அவன் நம்மை ஏமாற்றி பிழைப்பதால் அப் பெயர் வந்திருக்கலாம். இது இப்பொழுது சர்வ சாதாரண அன்றாடம் நிகழும் நிகழ்வு.   நமக்கு தெரிந்தாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. தெரிந்து சொன்னால் வேலை நடக்காது அல்லது ஆபத்து நம்மை வந்து அடையும் என்ற  மனப்போக்கு.   ஆள் பலம் ,அரசியல் பக்க பலம்,பண பலம் இருப்பவர்களுக்கே இந்த பயம் இருந்தாலும் அவர்கள்  வெளியில் காட்டிக் கொள்ளாமல் 'பந்தா'  பண்ணுவார்கள்

 
 நாம் எங்கிருந்து வந்தோம்! இருட்டு கருவறையிலிருந்து உருவாகி பின் வெளிச்சமான இந்த உலகத்திற்கு வந்தோம் . கருவறை இருட்டில் பயமில்லாமல் இருந்தோம். வெளிச்சமான உலகில் நம் மீது காற்று வந்து வீசும்போதே நமக்கு அச்சம் வந்து நம்மிடம் சேர 'வீல்' என்று  கதற அதனைக் கண்டு மற்றவர்கள் மகிழ வரவேற்றார்கள். நாம் அன்று அழாமல் ,கத்தாமல் இருந்திருந்தால் நம் வருகையை எதிர்பார்த்த அனைவரும் துடித்துப் போய் 'ஏன் குழந்தை அழவில்லை என்ன செய்வது' என்பதோடு   'குழந்தையை தலை கீழ தூக்கி  தட்டு அப்படியும் அழவில்லையென்றால் மருத்துவரை அழைத்து வா' என்ற  பதட்டத்துடன்   ஆவன செய்வார்கள். அவர்கள் அழுகையுடன் நாம் வருவதனை விரும்பியதால்தான் இன்று வரையும் அழுகையும் அச்சமும் நம்முடன் ஒட்டிக் கொண்டது.
  இருளிலேயே இத்தனை ஒளிந்திருக்க வெளிச்சத்திலேயே நாம் ஏன் ஒளிந்து வாழ்கின்றோம். இருளை போக்க ஒளி தேவை  அதிலுள்ள அழுக்கைப் போக்க  விளக்குமாறு தேவை . அறிவின் ஒளி கொடுக்க ஆசிரியர் தேவை
ஒன்று உறுதி. பிறப்பது நிச்சயமில்லை ஆனால் இறப்பது நிச்சயம். வயிரின் இருட்டு இடத்தில எத்தனை  நிகழ்வுகள்.கருவறைக்குள் உள்ள குழந்தைக்கும்  அறிவு வளர பல முயற்சிகளை கொடுத்து வருகின்றதும் உண்மை.இதுவும் இருளில்தான்  நிகழ்கின்றது. கருவறைக்குள்  சென்று வழிபடவே சிலர் விரும்புவதும் இதுதான் காரணமா!
இறைவன் படைப்பில் எத்தனை வினோதங்கள், அதில் நாம் அறியாதவை கணக்கில் அடங்காதவை.

No comments: