Wednesday, August 29, 2012

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்
இறைவன் நம்மைக் குர்-ஆனை ஆராயச் சொன்னான். அதில் கேள்விகள் கேட்கச் சொன்னான். ஆனால் நமக்குத் தெரியாவிட்டால் அரபு கற்றவர்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னான் என்று ஓர் நண்பர் கூறினார்.

அதற்கு ஆதாரமாக கீழே உள்ள இறை வசனத்தையும் அனுப்பி வைத்தார்.

And We sent not (as Our Messengers) before you (O Muhammad ) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allah). So ask of those who know the Scripture [learned men of the Taurat (Torah) and the Injeel (Gospel)], if you know not. (16:43)

சரியான மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டால் அரபி தெரிந்தவர்களும் அரபி தெரியாதவர்களும் ஒன்றுதான் என்பது என் கருத்து.

ஏனெனில் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ளத்தான் ஆய்ந்தறியும் அறிவு தேவையே தவிர வெறுமனே மொழிபெயர்ப்பு செய்வதற்கு அல்ல.

மொழிபெயர்க்க அரபி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால் விளக்கம் சொல்ல அரபி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை விளக்கும் வகையில், நண்பருக்கு நான் அளித்த பதில் கீழே உள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள், வளரலாம்!

*
16-43 ஐ அனுப்பித் தந்தமைக்கு நன்றி. ஆனால் அதே வசனத்திற்கு மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளையும் பாருங்கள்.

http://www.tamililquran.com/qurandisp.php?start=16#16:43


16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

இதன்படி முந்தைய வேதத்தில் ஞானம் பெற்றோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறதல்லவா?

இந்தத் தமிழ் மொழியாக்கத்தோடு நான் நின்றுவிடவில்லை. மேலும் தேடினேன்.


http://quran.com/16/43

Sahih International
And  We  sent  not  before  you  except  men  to  whom  We  revealed  [Our  message].  So  ask the  people  of  the  message  if  you  do  not  know.

இதன்மூலம், முன்பு அனுப்பிய பழைய வசனங்களை யார் அறிவார்களோ அவர்களிடமிருந்து கேட்டுப் பெறுங்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

Pickthall
And We sent not (as Our messengers) before thee other than men  whom We inspired - Ask the followers of the Remembrance if ye know not! -


ஞாபகம் உள்ளவர்களிடம் கேளுங்கள்

Yusuf Ali
And before thee also the messengers We sent were but men, to  whom We granted inspiration: if ye realise this not, ask of those who possess the Message.

யாருக்குத் தெரியுமோ அவரிடம் கேளுங்கள்

Shakir
And We did not send before you any but men to whom We sent revelation-- so ask the followers of the Reminder if you do not know--

Dr. Ghali
And in no way did We send (even) before you, except men to whom We revealed. "So ask the population of the Remembrance, in case you (i.e. the pagan Arabs) do not know."


Tamil Translation

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).

http://www.islamawakened.com/quran/16/43/default.htm


இந்தத் தளத்திலும் நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன.


நிச்சயமாக நாம் அறியாதவற்றை அறிவதற்கு எந்தெந்த வழிகள் உண்டோ அனைத்தையும் பயன்படுத்துவோம்.

நண்பர்கள் கலந்துரையாடி எட்டாதவற்றை எடுத்துக்கொண்டு அறிந்தோடிடம் கேட்டு ஞானம் பெறலாம் என்றுதான் கருதுகிறேன்.

நான் மட்டும் வளர்வது முக்கியமல்ல, என்னோடு அறியாதவர்கள் அனைவரும் ஞானம் பெறவேண்டும். அப்போதுதான் நம் சமூகத்தில் விழிப்புணர்வு வளரும்.

யாரோ எதையோ கேட்காவிட்டால், யாரும் எதையும் தேடப்போவதில்லை.
தேடலுக்கான தூண்டுகோலை உருவாக்குவதே நம் நோக்கமாக இருக்கட்டும்.

நான் ஒரு கேள்வியை எழுப்பும்போது, கூடுமானவரை அது தொடர்பான அனைத்தையும் வாசித்துவிடுகிறேன். அதன்பின்னர் எழும் கேள்விகளையே நான் உங்கள் முன் வைக்கிறேன். அப்படியான என் கேள்விகள் பலரின் எண்ணங்களையும் தூண்டுவதாக இருக்கும்படி செய்ய முயல்கிறேன்.

தவறான விளக்கங்கள் குர்-ஆன், ஹதீஸ் இரண்டுக்குமே கொடுக்கப்படுகின்றன. அந்தத் தவறான விளக்கங்களிலிருந்து சரியான விளக்கங்களுக்கு அனைவரும் செல்ல விரும்புகிறேன்.

அப்படி விளக்கம் தேடும்போது நான் முதலில் எடுத்துக்கொள்வது குர்-ஆன். அது முடிந்ததும்தான் ஹதீசுகள்.

இப்படியே ஒவ்வொரு பிரிவையும் முழுமையாக வாசித்து சந்தேகங்களை அகற்றி தூய்மை நிலைக்கு வர முயல்கிறேன். அனைவரையும் அதன் பாதையில் அழைக்கிறேன்.
Source : http://anbudanislam

No comments: