Sunday, September 16, 2012

திருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை!

திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும்போது நல்லதை நாடுவோம்,

விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த  பலாமிகக் கொடியதென்று பட்டதண்ணே குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.பண்டைய காலத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது.கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் இருந்தது. இறந்த கணவனை ஈமக்காட்டில் படுக்க வைத்து கட்டைகளை அடுக்கி, உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து, கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான  மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.
‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.

விதவைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது மட்டுமல்ல; விதவைகளுக்கு மறுவாழ்வும் உண்டு.
ஒரு பெண் கணவனை இழந்த விதவையானாலும், அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவளானாலும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. இது வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், சமூகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.



20ம் நூற்றாண்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் படுவேகமாக நடைபெற்ற போது மனு நீதி அறமானதோர் நாள் அதனை மாற்றும் நாளே ‘தமிழர் திருநாள்’ என்று கூறி சம்பிரதாயங்களையும், வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி துவக்கினார். இதன் விளைவாக மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றிக் கொள்ளுதல், வாழ்த்துரை வழங்குதல் எனப் பல்வேறு முறைகளைப் பின்பற்றி சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. இதையடுத்து 1967ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து திருமணச் சட்டத்துக்கு திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தம் 7-ஏ பிரிவாக இந்து திருமணச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.  கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமியத் திருமணங்கள் சீர்திருத்த திருமணங்களாகவே இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதால் அவர்களிடம் கண்ணியத்தோடும் மனிதாபிமானத்தோடும் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உரிமையினை முறையாக வழங்குவது ஆண்களின் கடமை.
மனைவியைத் தன் தந்தை வீட்டில் விட்டு கணவன் வெளிநாடு சென்று விட்டான். மாமியார்-மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சச்சரவு ஏற்படுகிறது. இதை அறிந்த பெண் வீட்டார், தங்கள் வீட்டுக்குப் பெண்ணை அழைத்து வந்து விடுகின்றனர். இதை விரும்பாத கணவன் வீட்டார்,திருமணம் விவாக முறிவு கேட்கும் நிலை பார்க்கின்றோம்

படித்த கதை ஒன்று
சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள்.  அந்த காட்சியினை நம்மாலும் தாங்க முடியாது

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம்  பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
திருமணம்  ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும்.
பெண்களுக்கு அவர்களது சம்தமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணாத்தால்) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா, அப்பாஸ், அபூஹுரைரா(ரழி- அன்கும்) நூல்:புகாரி முஸ்லிம்
நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூத்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, பைஹகீ, அஹ்மத்)
மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம்; அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம்,ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒருவேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்.

சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

வரதட்சணை கொடுமையால்  வாடி வதங்கும் சில வனிதையர்கள்  தனக்கென ஒரு வாழ்வு நாடி காதலித்து திருமணம் செய்ய விரும்புகின்றனர் .

வரதட்சணை தீமையை ஒழிக்க தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய உலக தமிழ் குடும்பம் விரும்பும் வரதட்சணைக்கு எதிரான சிறந்த தமிழ் பாடல்.

ஆண்களின் நடக்காத ஆசை இரண்டாம் திருமணம்!
போர் நடந்த நாடுகளில்  போரின் விளைவினால்  பல ஆண்கள் இறந்து விடுவதனைப் பற்றி  நாம் அறிவோம் . இது ஈரான்  வியட்நாம் நாடுகளில் நடந்தபோது ஆண்கள் போரில் மாண்டுபோய் பெண்கள் மிகைத்து இருந்த கொடுமை அதிகம் . போர்களில் அதிகமாக கொல்லப்படுகிராகள்.

கணவனை இழந்த பெண்களே அதிகம்.  பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது. அந்த நிலையில்  பெண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள மண முடிக்காத ஆண்கள் கிடைக்காத நிலை. குறிப்பாக  வியட்நாமில் பெண்கள் தவறான பாதையை மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.ஈரான் போர் முடிந்த நிலையில் அந்த நாட்டின் முக்கியமானவர்  இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கொடுத்து அந்த  மனைவியருக்குள்  நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் அது இஸ்லாம் அனுமதி தந்த முறைப்படி இருக்க வேண்டும் என  அறிவித்தார்.

‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.
குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.
மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
   இரண்டாம் திருமணம் பற்றி   ஒரு பெரியவர் பேசுவதனைக்  கேட்க நேர்ந்தது.   'ஆண்களில் பலருக்கு அந்த எண்ணம் இருந்தாலும் மனைவிக்கு பயந்து அதனை செய்வதில்லை மற்றும் ஒரு மனைவியை வைத்து குடும்பம் நடத்துவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில்  இரண்டாம் திருமணம் பற்றி நாம் எப்படி இந்த கால கட்டத்தில் யோசிக்க முடியும் எனக்  கூறினார்'.
  ஆகா! நல்ல செய்தி கிடைத்து விட்டது என்ற ஆர்வத்துடன் அந்த பெரியவர் சொன்ன இரண்டாம் திருமணம் பற்றி எனது மனைவியிடம்  சொன்னேன். அவள் சொன்ன ஒரே பதில் ' இத்தனை நாட்கள் அவர் செய்த பல நல்ல பிரசங்கங்களைப் பற்றி சொல்லாமல் இதனைப் பற்றி மட்டும் ஏன் சொல்கின்றீர்கள்' என வினவினாள்'. நான் வாய் அடைத்துப் போய் அமைதியானேன்.   

No comments: