Friday, September 28, 2012

வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது !


வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது 
இடுக்கு இல்லா சட்டம் இல்லா இடமில்லை

பொது இடத்தில  மது அருந்த முயன்றேன்
காவலர்  சட்டம் சொல்லி என்னை மடக்கினார்

'குற்றம் செத்தாய் உன்னை அழைத்து செல்ல வேண்டும்'
'நான் வெளிநாடு இது எங்கள் நாட்டில்  குற்றமில்லை'  என்றேன்
'இந்த நாட்டு சட்டம் அறிந்து இங்கு இருக்க வேணும்
சட்டம் அறியாமல் இருப்பது உன் குற்றம்தான்' என்றார்
'அறியாமல் செய்தேன் வருந்துகின்றேன்' என்றேன்
'பணத்தை கொடு விட்டு விடுகிறேன்' என்றார்.
'பணம் வாங்கி விடுவிப்பது குற்றமாகாதா?' என்றேன்
'அதைப்பற்றி நீ பேசினால் உன்னை அடைக்க வேண்டியதுதான்' என்றார்


கேட்டதை கொடுத்து விலகிச் சென்றேன்
இதை ஒருவர் கண்ணுற்று ஒலி ஒளி நாடாவில் பதிவு செய்துவிட்டார்
இதை அறிந்த அந்த அதிகாரி அவரை மிரட்டினார்
'மிரட்டல் வேண்டாம் .பிடித்த  நாடா தருகின்றேன்
வாங்கிய பணத்தில் பாதி பங்கு கொடுங்கள்' என்றார்.
'பணம் தருகிறேன் அந்நிய நாட்டு மது தரமாட்டேன்' .

மனம் ஒன்றி பிரிந்தனர் ஒருவர் டாஸ்மார்க் கடைக்குப் போனார்
மற்றொருவர் அந்நிய நாட்டு மதுவோடு ஓர்   இடம் தேடி சென்றார்.
  
வேலியே பயிரை மேய்கிறது. 

No comments: