Friday, October 12, 2012

வாழ்வின் கடைசியில் வருவேன் !


படத்தில் முதலில் இருக்கும் நான் வாழ்வின் கடைசியில் வருவேன்.

என்னிடத்தில் வரும்போது அனைவருக்கும் ஒரே (மௌத் ) பெயர்தான்.

ஒரே வெண்மையான  துணிதான் .பஞ்சு மெத்தை,தலையணை பட்டாடை  இன்னபிற ஏதும் கிடையாது

படத்தின்  முதலில் இருப்பது
பல பேரை சுமந்தது. அது நன்றாக இருக்கவேண்டும் . இதில் சுய நலமுண்டு. என்னையும் அது சுமக்கப் போவது. நீடூர் நெய்வாசல் அழகிய பழைய ஜாமியா பள்ளிவாசலில் உள்ளது .புதிய ஜாமியா பள்ளிவாசலிலும் அதே சுமக்கும் சந்தாக்தான் . பாருங்கள் அதன் உழைப்பை .பள்ளிவாசல் மாறினாலும் எனது உழைப்பை தொடர்வேன் என்று தொண்டு செய்கின்றது . உயர்வான சேவை செய்கின்றது . நல்லவர், கெட்டவர்,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் .பணக்காரன்,ஏழை ஆண் ,பெண் என்ற பாகுபாடு கிடையாது அனைவருக்கும் ஒரே மாதிரி சேவைதான்.


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி ஹதீஸ் 2748.)


 மரணம் ... ஒவ்வொரு ஆத்துமாவும் மரணத்தை சுவைத்தே தீரும் !
 மௌத்  அடக்கம் செய்யும்  நன்மை
 அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு. ஒருவர் அதை அடக்கம் செய்யும் வரை கலந்து கொண்டால் அவருக்கு ”இரண்டு கீராத்” உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள். ‘இரண்டு கீராத் என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘பெரும் இரண்டு மலைகள் போன்றது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொண்டு, அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவன் இருந்தால், அவன் இரண்டு ‘கீராத்’ நன்மைகளை கூலியாகப் பெற்று திரும்புகிறான். ஒரு கீராத், உஹது மலை போலாகும். ஒருவன் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்படும் முன் திரும்பிவிட்டால், அவன் ஒரு ”கீராத்” நன்மையுடன் திரும்புகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘இறந்தவருக்காக நீங்கள் தொழுதால், அவருக்காக துஆவை நீங்கள் மனத்தூய்மையுடன் செய்யுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘ஜனாஸாவை (அடக்கம் செய்ய) தீவிரமாக்குங்கள். அது நல்லதாக இருந்தால், அதை நன்மையின் பக்கம் முற்படுத்தி வைத்தவர்களாவீர்கள். அது தீமையானதாக இருந்தால் உங்களின் பிடரிகளை விட்டும் (உங்கள் பொறுப்பை) அந்த தீமையை இறக்கி வைத்தவர்களாவீர்கள்’ என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘ஜனாஸா (அடக்கம் செய்திட) தயார் செய்யப்பட்டு, அதை ஆண்கள் தங்களின் கழுத்துகளில் சுமந்து சென்றால், அந்த ஜனாஸா நல்லதாக இருந்தால், ‘என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்’ என்று அது கூறும். அது சரியில்லாததாக இருந்தால், தன்னைச் சேர்ந்தோரிடம் ”எனக்கு வந்த நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதன் அல்லாத அனைத்தும் கேட்கும். மனிதன் கேட்டால் அதிர்ச்சியாகி விடுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)

No comments: