Wednesday, October 31, 2012

'வெற்றிகரமான திருமணம் வாழ்க்கையின் ரகசியம்!'

வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில்.நடைபெறுகின்றதா?

வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில் நடைபெறுகிறது என்ற  காரணம் சொல்லி திருமணத்தில் மனநிறைவு அடையாதவர்கள் மற்றும் மனநிறைவு அடைந்தவர்களும் சொல்வது இயல்பு .
வெற்றிகரமான திருமணம் நமது சரியான முயற்சியில் உள்ளதை நாம் மறந்து விடக் கூடாது. திருமணம் திடீரென்று நடக்கும்  நிகழ்வாக நினைத்து பொறுப்பற்ற நிலையில் இருத்தல் தவறு . முறையான முயற்சி மேற்கொண்டு தகுதியானவர்களை  பொருத்தமாக தேர்ந்தெடுக்க வேண்டும் .பணத்துக்காக அல்லது அழகுக்காக மட்டும் முதலிடம் தராமல் முதலிடம்  குணத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் .திறமை,கருணை ,ஒத்துழைப்பு இவைகள் இதற்கு அவசியமாகின்றது .
 இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் :

முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090மேற்கொண்டு அதன் முக்கியத்தை அறிய இந்த காணொளி காணுங்கள்

No comments: