Saturday, October 6, 2012

உன்னையல்லால் யாரைக் கேட்போம்!

இறையோனுக்கு இணையுமில்லை துணையுமில்லை
இறைஞ்சுவோனுக்குஇணையுமுண்டு  துணையுமுண்டு
ஆளுகை செய்கிறவன் அவன்
பேணுதல் செய்கிறவர் மனிதன்

இறையோனாய் இருப்பவன் இறைவன்
இறைஞ்சுவோனாய் இருப்பவன்  மனிதன்
வேண்டுபவனாய் இருப்பவன் இறைவன்
கேட்பவனாய் (வேண்டல் ) இருப்பவன் மனிதன்

இறைவனை நாடி சான் போனால்
நம்மை  நாடி முழம் வருவான்
அவனை நாடி முழம் போனால்
நம்மை  நாடி பாகம் வருவான்

கருணையால் நம்மை பிறக்க வைத்தான்
தொழுகையால் அவனை நேசிக்க வைத்தோம்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்



உதவி கேட்டால் பல காதம் ஓடுகின்றார்
பதவி கொடுத்தால் நேசம் காட்டுகின்றார்
யாரை வைத்து அவர் வந்தார்
ஊரை நம்பி அவர் வருவார்
அவர் வேடம் ஊரார் அறிந்திடுவர்
அவருக்கு  பாடம் ஊரார் புகட்டிடுவர்
சாசு கொடுத்து பதவி பெற்றார்
மாசு கொண்டு சொத்தைச் சேர்த்தார்
கேட்டது கொடுக்க காரணம் கேட்டார்
கொடுத்தது பறிக்க நேரம் பார்ப்பார்
கொடுத்ததை கொடுத்து சேர்த்து பிடுங்குவார்
கொடுக்காததையும் கொடுக்கச் சொல்லி வாங்குவார்
காய்ந்த மாடு காகிதமும் தின்னும்

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [-குர்ஆன்Yunus 10:44]

 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
-குர்ஆன் 2:21

No comments: