Wednesday, November 21, 2012

நீ ஒரு "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஃ”


அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.

“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஃ”  என்றேன்.

“நான் என்ன ஒரு அரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.

“அரிசுவடியில்தான் எல்லாமே ஆரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.

நீ இல்லையெனில் நானில்லை” என்றதுடன் 
“நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .
உன் மீது எனக்கு உள்ள ஈடுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் உயிராக ஊடல் கொண்டேன்.
அவள் இதயம் இப்போது என் வசம் ஆகும் என நம்பினேன்.
ஆனால் அவள் நம்பவில்லை. கோபம் கொப்பளித்தது.அனல் பார்வை. இயற்கையான பிடிவாதம் . வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தேது!  என்னிலை பரிதாபமானது.வேடிக்கை விபரீதமானது. எல்லாம் ஏமாற்றம்.ஐயகோ! என் செய்வேன் .என்னிலை பரிதாபமானது.
ஒட்டலின்றி ஓட்டமெடுத்தேன் எஃகான உள்ளத்தோடு ஒளடதம் (மாற்று மருந்து) நாடி .

சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள். 



பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

No comments: