Monday, December 10, 2012

"கேட்கிறேன், சொல்லுங்கள் !"


கல் , மண், தீ, நீர், காற்றெனப் புவியோர்
சொல்பொருள் அனைத்தும் தோன்றிய  தெங்கனம்?
வானும் மதியும் மண்ணிடைக் கடலும்
தானே இயங்கும் தத்துவம் யார் செயல் ?
உயிரோடு கண்வாய்  செவியென விரிந்து
பத்தாம் மாதம் பளிங்குபோல் வெளிவரும்
விந்தை யார் செயல் ? விளக்கம் எப்படி ?
கோடை வசந்தம் குளிர்பனி மழை
தோன்றுவ  தெங்கனம்? சுழற்றுவ தெவ்விதி ?
விஞ்ஞா னத்தால் விபரமறிந்து 
அ ஞ்ஞா னத்தை அகற்ற மாட்டீரோ ?
சந்திர மண்டலம் தழுவிய ஞானம்
சாவைத் தடுக்க சக்தி இல்லாததேன் ?
"கேட்கிறேன், சொல்லுங்கள் !"
                 படித்த பாட்டு  நினைவில் நின்றது. கவிதை இயற்றியவர்... ? !



புவனங்களின் படைப்பு
எண்ணிலா கண்டம் இறைவன் படைத்தான் ;
விண்ணில் விளக்கம் அவனே அறிவான் ;
தண்ணீர் காற்று மண்ணோடு நெருப்பும்
எண்ணியே இறைவன் படித்தவை யாகும்
      
   -----------------------------------

கல்லும் மலையும் கதிரவன் மதியும்
புல்லும் புகழும் நீர்வாழ் இனமும்
பல்வகைப் பறவை வல்லியல் விலங்கும்
யெல்லாம் படைத்த இறைவனாம் அல்லாஹ்
                                                                            - பா . கமலக் கண்ணன்
                                                                            திருமறைத் தேன் துளிகள்


No comments: