Friday, December 7, 2012

பேஸ் புக்கில் நண்பர்கள்

பேஸ் புக்கில்  நண்பர்கள் எனக்கு கோட்டா முடிந்துவிட்டது என்று பேசுவோருக்கு உண்மையான நண்பர்கள் எத்தனை பேர் கிடைத்து விட்டார்கள் என்ற அறிக்கை white paper தருவது மற்றவருக்கு பலன் அளிக்கலாம் .எனக்கு பேஸ் புக்கில் சேருவதற்கு முன்பே சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதில் வந்து நண்பர்களாக இணைந்துக் கொண்டார்கள் மற்றும் சிறந்த நண்பர்களாக சேர்ந்துக் கொண்டார்கள்,மற்றவர்களை கண்காணித்து வருகின்ரேன்(who are the black sheep - an odd or disreputable member of this facebook)  நேரம் கிடக்கும் போது  உதவியும் பாதுகாப்பும் கேட்கலாம்!  அப்பொழுது பார்ப்போம் எத்தனைபேர் தொடர்கிறார்கள் என்று! உங்களுக்கு எப்படி சொல்லுங்கள் !

" உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு "- திருக்குறள்

மு.வ உரை:

    உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

நாகூர் பாஷையில் திருக்குறள்

  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிணும்.

No comments: