Saturday, December 8, 2012

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்
நம்பினோர் கெடுவதில்லை என்பது  சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
மார்க்கத்தின் அடித்தளமே நம்பிக்கை
செயல்பாடற்ற மார்க்க நம்பிக்கை விரயம்
சொற்களால் அழகு படுத்தி செயலால் மாறுபடுதல் மாண்பல்ல
சொல்வோர் செயலில் ஈடுபடுதல் மாண்பு
மற்றவர் பார்க்க மற்றவர் போற்ற செயல்படுதல் போலித்தனம்
சொல்வது ஒன்று செய்வது ஒன்று கயவர்களின் நாட்டம்
சொல்லும் செயலும் இரண்டற  கலப்பது சிறப்பு
செயல்பாடற்ற ஆசிரியரின் கற்பித்தல் மாணவர் மனதில் உறையாது
மார்க்கம் சொல்வோர் மாற்று வழி நடக்க கேட்போர் வேறு வழி போவார்
சொல்வோர் செயலை கேட்போர் கண்காணிப்பர்
வழி நடத்துவோர் வாழ்வின் முறை தொடர்வோரைத் தொடரும்
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது”
வானத்தை நோக்கி வீசிய கல் திரும்ப வரும்
பெற்றோரின்  வாழும் முறை அவர்தம் மக்களுக்கு பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்
வேதம் போதிக்கும் மேதைகளின் வாழ்வு பின்பற்றுவோரையும் வழி நடத்தும்
சிறப்பாக போதித்து செயல்பாட்டில் களங்கமானால் அனைத்தும் நாசமாகும்
கற்பித்தலும் வாழ்தலும் சிறப்பாக அமைய அனைத்தும் ஒளிபெறும்

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி

No comments: