Friday, January 25, 2013

சிவாஜி கணேசன் நடித்த விஸ்வரூபம் படமும் கமல் நடித்த விஸ்வரூபம் படமும்!

 விஸ்வரூபம் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு பொருள் விளங்கும்!
பாபர் மசூதி பிரச்சனை தீர்ந்தபாடில்லை. அடுத்தது விஸ்வரூபம் !
விஸ்வரூபம் படத்திற்கு ஏன் இந்த பிரச்சனை? இப்படி ஒரு பிரச்சனை இனி தொடரக் கூடாது!
இஸ்லாமிய தீவிரவாதம் மட்டுமல்ல இந்துத்வா தீவிரவாதங்கள், தமிழ் தீவிரவாதங்கள் எதையும் உருவாக்குவதற்கு யாரும் ஒரு கருவியாகி விடாதீர்கள்.
அமெரிக்காதான் தீவிரவாதம் உருவாக்குவதற்கு வித்திடுகிறது. யாரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் .அது அவர்களது உரிமையாம் .விளைவு தினம் அதன் பலனை அது கண்டு வருகின்றது.
அந்த 'உரிமை' என்ற பெயரில் மற்ற நாடுகளில் அமெரிக்கா புகுந்து விளையாடுகின்றது.

1980 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து  வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'விஸ்வரூபம்' ஒன்று அதில் ஏதாவது பிரச்சனை இருந்ததா?
கமல் நடித்த விஸ்வரூபதிற்கு ஏன் இந்த பிரச்சனை?
கமல் ஒரு நல்ல மனிதராக ,உயர்ந்த சிந்தனையாளராக நல்ல நடிகராக இருக்கலாம் .
அவர் பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்திருக்கலாம் .அந்த விஸ்வரூபம் படம் எந்த வகையில் மக்களுக்கு நன்மையான செய்தியை ,கருத்தை தருகின்றது என்பதனை அவரே சொல்லட்டும் .பொழுது போக்கு படமா! மனித மனதை திருத்துவதற்கு வழி வகுக்கின்றதா! மனிதநேயத்தை வளர்கின்றதா! நெஞ்சை வருடி விடுகின்றதா!

கொலை வெறி பாடல் வந்து அந்த பாடலை பொருள் விளங்காத குழந்தைகளும்  பாடினார்கள் .விதையிலேயே  நச்சுப் பொருள் கல்ந்துவிட்டது போல் அது அமைந்து விட்டது.
விஸ்வரூபம் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு பொருள் விளங்கும் 
 (விஸ்வரூபம் என்பது கடவுளாக அவதாரம் எடுத்தவர் தன்னை மிகப் பெரிய உருவமாக்கிக் கடவுளாகக் காட்டுவது.)
.காரணம் விஸ்வரூபம் என்ற பெயர் தமிழ் பெயர் இல்லை.நடிகர்களை இஸ்லாமிய பெயர் வைத்து நடிக்க வைத்து (தீவிரவாத கருத்துக்கு எதிர்ப்பாகவோ!) அதற்கு ஏன் விஸ்வரூபம் என்ற படத்தின் பெயர் கொடுக்க வேண்டும்! விஸ்வரூபம் அமெரிக்காவுக்கு ஆதரவான படம் அதனால்தான் அமெரிக்காவில் போய் தங்கி அதனை அங்கும் வெளியிடுகிறார்

கவியரசு வைரமுத்து அவர்கள் தான் எழுதிய சில வரிகளை நீக்கினார் கிருத்துவ சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க. அது பெருந்தன்மை. தவறு செய்பது இயல்பு .அதனை திருத்திக் கொள்வது உயர்வு . அதே வழியை கமல் அவர்களும் கடைபிடிக்கலாம். கமல் என்ற தனி  நபர் மீது  யாருக்கும் வருத்தமில்லை . படத்தில் தவறு இருப்பதாக சொல்கிறார்கள்.அதனை அவர் சிறிது சிந்தித்து செயல்பட்டு உயர்வடையட்டும்.அதுதான் நம் விருப்பம் . .தமிழ் நாட்டில் நல்ல குடும்பத்தில் பிறந்து  வளர்ந்தவர், தன்னோடு கூடி வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் மனம் புண் படாமல் செயல்படட்டும் என்பதே நமது விருப்பம் .சகோதரத்துவம் தொடரட்டும் .

Who created the universe? Who is the cause for this ‘VISWAROOPAM’ (Universe)? GOD?
விஸ்வரூபம் என்பது கடவுளாக அவதாரம் எடுத்தவர் தன்னை மிகப் பெரிய உருவமாக்கிக் கடவுளாகக் காட்டுவது.


விஸ்வரூபம்
இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர் ஜி. அனுமந்தா ராவ்
பத்மாலயா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
சுஜாதா
ஸ்ரீதேவி
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு நவம்பர் 6, 1980

No comments: