Monday, February 4, 2013

தலையிலமர்ந்த துயர் வர வாடினேன்!

கலையிழந்த பிடிப்பு
தலையிழந்த தரம்
வலையில் சிக்கிய மீனாகி
தலையிலமர்ந்த துயர் வர வாடினேன்

பகைபோன்றது படம்
நகையிழந்தது முகம்
பரிவானது மனம்
சரியானது குணம்

நன்மீன் உண்ணவில்லை
நனிவாடிற்று உடம்பு
நலிவுற்றோர் மீன் பிடிப்போர்
கலமோட்ட காசில்லை கடல்செல்ல!

எரிவாயு எகிரி நிக்க இயந்திரக்  கலமியங்கவில்லை
இயங்கும் அரசு கண்டு கொள்ளவில்லை
இசைப் பாடி எள்ளி நகைக்கின்றனர்
அரசின் அவல நிலைக் கண்டு!
                         உன்னை நேசிக்கிறேன்!

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! நன்றி!