Friday, April 19, 2013

பிரபலங்கள் வரிசையில் தாருல் இஸ்லாம் பா.தாவூத்ஷா அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நூருத்தீன்

நூருத்தீன்

N.B. அப்துல் ஜப்பார், பல்கீஸ்பீ தம்பதியருக்கு, 1965ஆம் ஆண்டு பிறந்தவர் D.A. நூருத்தீன் அஹ்மத். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் கணினி மென்பொருள் துறையில் பட்டச் சான்றிதழும் பெற்று, அமெரிக்காவிலுள்ள ஸியாட்டில் நகரில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

ஆனந்த விகடன், முஸ்லிம் முரசு, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதில் இவரது எழுத்தார்வம் துவங்கியது. இந்நேரம்.காம் எனும் தமிழ் இணையச் செய்தித் தளத்தில் ‘மனம் மகிழுங்கள்’ என்ற தொடர் வெளியாகி அது வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சத்தியமார்க்கம்.காம் எனும் இணைய இதழில் சஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தோழர்கள்’, ‘தோழியர்’ எனும் தலைப்புகளில் தொடராக எழுதி வருகிறார். இவற்றுள் ‘தோழர்கள்’ முதல் பாகம், மனம் மகிழுங்கள் ஆகியன நூலாக வெளிவந்துள்ளன.


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947 இதழ் சிறிது சிறிதாகப் பதிவாகி வருகிறது. தங்களது பார்வைக்கு - http://www.darulislamfamily.com/di-magazine-t/magazines.html

அப்பக்கத்தில் அக்டோபர் 1947 என்பதை க்ளிக் செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும் -
http://www.darulislamfamily.com/di-magazine-t/118-oct-1947.html

இன்ஷா அல்லாஹ் படித்துப் பாருங்கள்; கருத்திடுங்கள். பிறருக்கும் தெரிவியுங்கள்.

அன்புடன்,
-நூருத்தீன்



புத்தகங்கள், தொடர்கள்
by நூருத்தீன்



  தோழர்கள் (56)

    நபித் தோழர்களின் அற்புத வரலாறு

    சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியாகும் தொடர்.
    தோழியர் (14)

    நபித் தோழியரின் வரலாறு

    சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியாகும் தொடர்.


மனம் மகிழுங்கள் (1)

    மனம் மகிழ்வுற ஓர் உற்சாகத் தொடர்.

    இந்நேரம்.காம் இணைய தளத்தில் வெளியானது.
    பொற்காலம் (10)

    கலீஃபா உமரும் (ரலி) ஆளுநர்களும்

    சமரசம் பத்திரிகையில் வெளியான தொடர்.
    அவ்வப்போது (3)

    அவ்வப்போது மனதில் தோன்றுபவை.

    இந்நேரம்.காம் இணைய தளத்தில் வெளியாகும் தொடர்.
    இரா உலா (6)

    கலீஃபா உமரின் (ரலி) இரா உலா

    சமரசம் பத்திரிகையில் வெளியான தொடர்.

தோழர்கள்

புனிதர்களின் அற்புத வரலாறு



ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: சத்தியமார்க்கம்.காம்

ஆண்டு: ரமளான் 1432 / ஆகஸ்ட் 2011

பக்கங்கள்: 372

விலை: ரூபாய் 150


இந்நூலைப் பற்றி

“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.

- பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது
-----------------------------------------------------

 தோழர்கள் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சகோ. நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, "தோழர்கள் - முதலாம் பாகம்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11 செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது. அவ்விழாவின் புகைப்படத் தொகுப்பு.


“தோழர்கள் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்“  slideshowவில் 6 நிமிடம் 17 நொடிகளில் மைக்கில் பேசுவது நூருத்தீன் அவர்கள்
 http://www.darulislamfamily.com/


.

No comments: