Wednesday, July 24, 2013

சொந்த மண்ணில் அன்னிய உணர்வு

அரபு மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்கள்.

இன்று நாங்கள் பணிபுரியும் இடத்துக்கு ஒரு அரபு யுவதி வந்தார். அவர் அரபி என்றாலும் ஆங்கிலத்தில்தான் உறையாடினார். அவருக்கான சேவையைப் பெருவதற்கு எழுத்து விண்ணப்பம் தரவேண்டும்.

நான் அதற்கான விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்தேன்,அது அரபு மொழியில் இருந்தது.

அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவம் இருக்கிறதா எனக் கேட்டார், அதற்கு நான் ஆங்கிலத்தில் படிவம் இல்லை என சொல்லிவிட்டு எதற்கு
ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள் என கேட்டேன்.


அதற்கவர் எனக்கு அரபி படிக்கத் தெரியாது. நான் இந்த நாட்டுப்பெண் என்றாலும் வளர்ந்தது எல்லாம் மேலை நாட்டில், என்னால் அரபியில் பேச முடியும் ஆனால் படிக்கத் தெரியாது என சொன்னார்.

சரி, நான் உங்களுக்கு உதவுகிறேன்,
நீங்கள் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யுங்கள் என சொல்லி உதவி செய்தேன்.

பின்னர் அவர், உங்களால் அரபி படிக்க முடிகிறது, அரபியான என்னால் என்மொழியைப்படிக்கமுடியவில்லை,
வெட்கமாக இருக்கிறது
என்று கூறி உதவிக்கு நன்றி கூறி சென்றார்.

எத்தனை மொழி படித்தாலும் தாய் மொழியைப் படிக்கத் தவறுவது பெரும் கைச்சேதமே. சொந்த மண்ணில் அன்னிய உணர்வை அது ஏற்படுத்தி இருக்குமென்றே நினைக்கிறேன்.

நன்றி : தகவல் தந்தவர்  
 Mohamed Salahudeen Abdul Rahim