Tuesday, November 19, 2013

ஆயூள் வரை தொடர்கதை தொடரும்

ஒன்றுமில்லை ஆனால் எல்லாம் உண்டு செயற்கையாக
ஒன்று இருக்கிறது உயர்வாக பூமியின் அடியில் இயற்கையாக
தோண்டுமிடமெல்லாம் பெற்றோல் வளம்
தோண்டியெடுத்து கிடைத்த வளத்தை விரயமாக செலவு செய்யும் இடம் அமெரிக்கா
தோண்டும் தொழிலாளி துண்டோடு தன் நாடு திரும்புவான்

('சோடா விற்றால் பாட்டல் மிச்சம்
சிகரெட் விற்றால் சிகரட் வைக்கும் டப்பா  மிச்சம்' அக்கால மொழி
அரபு நாடு போன தொழிலாளியின் நிலை இப்பொழுது)

மண் வெளிநாட்டிலிருந்து வரும்
செடிகள் வெளிநாட்டிலிருந்து வரும்
தண்ணீர் கடல் நீரை மாற்றப்பட்டு வரும்
மேகங்கள் இருக்கும் மழை பெய்யாது
காற்று வீசும் மணல் காற்றாக வீசும்
வெயில் சுட்டரிக்கும்


இத்தனை இருந்தும் அரபு நாடு போக வேண்டும்
நம் நாட்டில் வேலை இல்லை
கிடைத்த வேலை நிரந்தரமில்லை
ஊதியம் சேர்க்கப் பட முடியவில்லை
ஆண்கள் அந்நிய நாடு
பெண்கள் இங்கு வாழும் நிலை
பெண்களுக்கும் பாதுகாப்பில்லை

சிறுக சிறுக சேர்த்த பணம் சேமிப்பில்
சேமித்தது ஒரு குடில் கட்ட
சேமித்த பணத்தில் குடில் கட்டி திருமணம் முடிக்க
சேமித்த தொகை பற்றாமல் போக கடன் பெற்றதால்
கடனை அடைக்க திரும்பவும் வெளிநாடு
தொடர்கதை ஆயூள் வரை தொடரும்
தொலைக்காட்சி தொடரை மிஞ்சும்

No comments: