Wednesday, November 27, 2013

ஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்...

 
   நாங்க ஒரு டீ குடிச்சா கூட அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒரு ஆண் தான் அந்த டீக்கு காசு குடுக்கணும்... எல்லா கணவனையும் போல எங்க கணவரும் எங்களுக்கு டிரைவர் வேலை பார்க்கணும்.. ஆனா பதிலுக்கு நாங்க ஒருவேளை சாப்பாடு பண்ணித் தரணும்னு அவர் எதிரபார்த்தா, செம டென்ஷன் ஆயிடுவோம்... பெண்ணியவாதிகள் சாம்பார் வைக்கிறதா? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? குழந்தைப் பேறு என்கிற இயல்பான இயற்கை நிகழ்வுக்கான ஆசை மனதில் இருக்கும், ஆனால் அது அபத்தம் என்கிற கருத்து மண்டைக்குள்ள ஏறி படுத்துற பாடு இருக்கே? ஐயையோ...

  அவன் நம்மளை டாமினேட் பண்ண விடக்கூடாது.. ஸோ, நாம அவனை டாமினேட் பண்ணிடணும்... ஓ மை காட்.. அரைகுறையாக பெண்ணியம், பெரியார் எல்லாம் படித்து விட்டு நானும் இப்படி கொஞ்ச நாட்கள் திரிந்திருக்கிறேன்.. பட் இப்ப திருந்திட்டேன்.. நிறைய பேர் அப்படியே இருக்காங்க... டிங்... டிங்.. டிங்


  எந்த இசங்களும் தெரியாமல்.. வாழ்க்கையில் அதை சாதித்த பெண்கள் இங்கு ஏராளம் இருக்கிறார்கள்... அவர்களை பற்றி நமக்கு கவலையே இல்லை... ஏனெனில் நம்மைப் போல் அவர்களுக்கு சுற்றி, சுற்றி எழுதவோ, பேசவோ வராது... உண்மையில் பெண்ணியம் என்பதன் வரையறை, அதற்கான தேவை இதெல்லாம் பெரிய ஏரியா... ஆண், பெண் இருவருக்கும் சமமான சம்பளம், வாக்குரிமை, சமூக உரிமை என பல போராட்டங்களை உள்ளடக்கியது... அதுபற்றி முழுமையாக வாசிக்காமல், தெரிந்து கொள்ளாமல் அரையும் குறையுமாக பேசி... நட்போடு நம்மை நடத்தும் ஆண்களையும் எகிறி ஓட வைக்கிறோம் என்பதே உண்மை..

  பெண்களை விலக்கிய கூட்டங்களும், இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ, அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்..

  நிஜமாகவே பெண்ணியம் தெரிந்து, அதைப் புரிந்து நடப்பவர்கள் இங்கே இருக்கலாம்... அவர்கள் இதைக் கடந்து போயிவிடவும்.. உங்களை சொல்லலை.. சண்டை போட சக்தியும் இல்லை



ஆக்கம் : பிரியா தம்பி
Priya Thambi

No comments: