Friday, December 27, 2013

ஜும்மா தொழுகைக்கு பாங்கு சொல்லிட்டாங்க !

'பாங்கு சொல்லிட்டாங்க. ஜும்மாவுக்கு போய் ஹஜ்ரத் ஹதீஸ் சொல்வார் போய் கேள் .சீக்கிரம் கிளம்பு '
-தாய்

'ஒவ்வொரு வாரமும் தான் ஹதீஸ் சொல்கிறார் .நான் கேட்கிறேன். மனதில் நிற்காமல் மறந்து விடுகிறதே. பின் ஏன் அவசரப் படுத்துகிறாய்.'
-மகன்

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். நல்லா உண்கிறாய் அது உன் வயிரிலேயே இருந்துக் கொண்டேவா இருக்கு. அந்த உணவுதான் உன்னை உயிர் வாழ வைக்கிறது. அதுபோல் தான். அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும். அது உன்னை அறியாமலேயே உன்னை உயர்வடையச் செய்யும்.உனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அதன் அருமை உனக்கு இப்போது விளங்காமல் போகலாம். ஆனால் அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும் உன் உள் மனதில் உறைந்து நிற்பதனை காலம் வரும்போது நீ அறிவாய். '
-தாய்
---------------------------------
 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்  604.


ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(9)

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11) (அல்-குரான் 62: 9,10,11).
 இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்துவதைக் கேட்க  முன்பாகவே வந்து விட வேண்டும். 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930).
Narrated Ibn Umar:

When the Muslims arrived at Medina, they used to assemble for the prayer, and used to guess the time for it. During those days, the practice of Adhan for the prayers had not been introduced yet. Once they discussed this problem regarding the call for prayer. Some people suggested the use of a bell like the Christians. Others proposed a trumpet like the horn used by the Jews. But Umar was the first to suggest that a man should call the people for the prayer; so Allah’s messenger ordered Bilal to get up and pronounce the Adhan for prayers.
 Bukhari Book 1 Hadith 578
According to the Abu Hanifah and Ahmad Ibn Hanbal Schools of Thought the Adhan is as follows:

    Allahu Akbar (four times aloud)
    Ash-hadu an laa illaaha illallah (twice aloud)
    Ash-hadu anna Muhammadan rasuloolullah (twice aloud)
    Hiyah ala Salaah (twice aloud)
    Hiyah ala Falah (twice aloud)
    Allahu Akbar (twice aloud)
   Azan is recited in a loud voice by the Muezzin facing the direction of the Ka'ba in the following words, which are said in the order mentioned:


"Allahu Akbar" - recited FOUR times.

Meaning, "Allah is Most Great."(four times)

"Ash-hadu an la ilaha ill-Allah" - recited TWO times.

Meaning, "I bear witness that there is none worthy of being worshipped except Allah."(twice)

"Ash-hadu anna Muhammad-ar-Rasoolullah" - recited TWO times.

Meaning, "I bear witness that Muhammad is the Apostle of Allah."(recited twice)

"Hayya 'alas-Salah" - recited TWO times.

Meaning, "Come to prayer."(turning the face alone to the right and saying it twice)

"Hayya 'alal-falah" - recited TWO times.

Meaning, "Come to Success."(turning the face alone to the left and saying it twice)

"Allahu Akbar" - recited TWO times.

Meaning, "Allah is Most Great" (face back to front and saying it two times).

Morning (Fajr) Prayers

The following phrase is added after "Hayya 'alal-falah" in the Azan of the early morning prayers:

"As-salatu khairum minannaum" - recited Two times.

Meaning, "Prayer is better than sleep" (recited two times).

Adhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு...
ஜூம்மா தொழுகை பற்றிய விளக்கங்கள்:

No comments: