Friday, January 10, 2014

என்ன தொழில் ஆரபிக்கலாம்!

நான் ஒரு தொழில் ஆரம்பிக்கலாமென்று இருக்கேன்.
நீ என்ன நினைக்கிரே?
ஆமா ஆரம்பிச்ச தொழிலெல்லாம் இழுத்து மூடியாச்சு
புதுசா ஆரம்பிச்சு என்ன கிழிக்க போறீங்க!
அதை விடு. நல்லதை நினைத்து நான் நினைப்பதற்கு தடங்கள் செய்யாதே.
சரி நல்லது தொடங்குங்க

என்ன தொழில் ஆரபிக்கலாம் ?
அதை என்னிடம் கேட்டா!
நீ தான் நிறைய படிச்சு இருக்கிறாயே! 
அதுவும் பிசினஸ் மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்பு
படிச்சேன். நல்லா படிச்சிருந்தாதான் நல்ல மாப்பிளே கிடைப்பார்னு எங்க அப்பா படிக்க வச்சாரு.
உங்களை கட்டிகிட்டே பின்னே படிச்சதெல்லாம் மறந்து போச்சு
நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு சொல்றியே
பின்னே ஏன் இதெல்லாம் ஏன் கிட்டே வந்து கேட்குறிங்க
காரணம் இல்லாமே கேட்பேனா
சரி சொல்லுங்க


தொழில் செய்றதுக்கு பணம் கொஞ்சம் தேவைப்படுது
நீ உன் நகையை கொடுத்தா அதை வித்து முதலாக்கலாம்
அதான் எல்லா நகையும் வித்து தொலைச்சுட்டீங்களே
சரி அப்பண்ணா உன் அம்மாகிட்டே சொல்லி உங்க வீட்டிலேந்து வாங்கிட்டு வாயேன்
வாங்கினது போதும் .இனிமே கேட்டாலும் தர மாட்டாங்க

நீங்க வீட்டிலே பிள்ளைகளே பார்த்துகிட்டு இருங்க
என் படிப்பை வைத்து வேலைக்கு போய் சம்பாரிச்சு குடும்பம் நடத்துவோம்

அதான் படிச்ச பெண்ணை கட்டிக்க கூடாதுன்னு எங்க அம்மா சொன்னாங்க
எங்க அப்பா கூட சொன்னாரு என்னை விட குறைஞ்ச படிப்பு படித்தவர எனக்கு கட்டக் கூடாதுன்னு
எங்க அம்மாதான் நீங்க நல்லா தொழில் செய்யரிங்க அதிலும் படித்தவர்னு கட்டி வச்சாங்க

'வாசல்ல யாரோ கதவு தட்றாங்க. போய் பாருங்க!' 
கதவை திறக்க தனது மாமனாரும் மாமியாரும் வருகிறார்கள்

'என்ன ஒரே விவாதமா காதிலே விழுந்திச்சு'
'ஒண்ணுமில்லே மாமா உங்க வீட்டுக்குத்தான் போகனும்னு சொன்னாங்க வீட்டிலே
நான் நாளைக்கு போலாம்னு சொன்னேன் அவ்வளவுதான் .உங்க மகளுக்கு இப்பவே போகனும்னு பிடிவாதம் '

'நல்ல வேலை நாங்களே வந்துட்டோம் '.
'வாங்க  அம்மா வாங்க  அப்பா' என்று சொல்லி வரவேற்று
இப்ப ஏன் இவங்க வந்தாங்க என்று முனகிக் கொண்டே உள்ளே சென்றால் மனைவி

No comments: