Thursday, January 9, 2014

இவரைப் போன்றோரை நமது மீடியாக்கள் வெளிச்சம் போடுவது இல்லை.


கேப்டன் - ரஃபீக் சுலைமான்

< இவர் யார் தெரிகிறதா..........? என்று நான் கேட்டால்,

உங்கள் கேள்வி அனேகமாய், இவர் எந்த சினிமாவில் நடித்திருக்கிறார்?? என்பதாக இருக்கும். அல்லது இவர் எந்த நாட்டு அரசியல் தலைவர் என்பதாகக்கூட இருக்கலாம்.

அப்படியெல்லாம் இல்லைங்க என்று சொன்னால் அப்ப யாரு இவருங்க ? என்பது இறுதியாய் இருக்கலாம்.

இவரைப் போன்றோரை அறிந்திராத குற்றம் நம்முடையது அல்ல, இவரைப் போன்றோரை நமது மீடியாக்கள் வெளிச்சம் போடுவது இல்லை. மக்கள் மனதில் நிறுத்தியதுமில்லை.



பொய் சாகசங்களின் ‘ஹீரோ’க்களை பால்மழையில் நனைய வைக்கும் இந்த நாள்களில், இந்த மெய் சாகச வீரர் எனக்கு நிஜ ’ஹீரோ’ வாகத் தெரிந்தார்.

என்ன சாகசம் புரிந்தார்?

அண்மையில் சவூதியா விமானம் ஈரானிலிருந்து சவூதியின் நகரம் மதினாவில் தரையிரங்கும் போது வலது-புற சக்கரம் பழுதானதால் இடதுபுற சக்கரத்துடன் விமானம் தரையிறக்கப்பட்டது. 29 பேர் படுகாயமுற்றனர். கேள்விப்பட்டிருப்போம்.

அதுவல்ல இவர் சாதனை,



போலந்து நாட்டின் ஒரு விமானம் ஒன்று தரையிறங்க ஆயத்தமான நேரத்தில், இருபுறத்தின் சக்கரங்களும் பழுதாகி வெளிவர மறுத்தது. அதிர்ந்துபோன பயணிகள் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு இறுதியான பேச்சு என்று குமுறத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் 200க்கும் அதிகமான பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் இந்த ஹீரோ. போலந்து நாட்டைச் சார்ந்தவரான இவரது பெயர் கேப்டன் டாட் வ்ரோனா ( Capt. Tad Wrona ). 2013ம் ஆண்டின் போலந்து ஹீரோ என்று அந்நாட்டு அரசு அவரை கௌரவித்திருக்கிறது.

வாழ்த்துகள் கேப்டன் ( நான் இவரைச் சொன்னேன்)!


Rafeeq Sulaiman

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

போற்றப்பட வேண்டியவர்...